முதல்முறையாக டிவி தொகுப்பாளராகும் நடிகை தமன்னா.. எந்த நிகழ்ச்சியில் தெரியுமா ?

முதல்முறையாக டிவி தொகுப்பாளராகும் நடிகை தமன்னா.. எந்த நிகழ்ச்சியில் தெரியுமா ?

தொலைக்காட்சி ஒன்றில் பிரம்மாண்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் நடிகை தமன்னா.

பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களது நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக தயாரித்து ஒளிப்பரப்பி வருகின்றனர். அப்படி ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு நல்ல டிஆர்பி பெற தொலைக்காட்சி நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்காக நிகழ்ச்சியில் பிரம்மாண்டத்தை காட்டி, புதிய யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகதான் திரையுலகில் புகழ்பெற்று விளங்கும் ஹீரோக்களை வைத்து நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் நடத்தி வருகின்றனர்.

முதல்முறையாக டிவி தொகுப்பாளராகும் நடிகை தமன்னா.. எந்த நிகழ்ச்சியில் தெரியுமா ?

ஏற்கனவே பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கோடீஸ்வரன்’ நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சி பல மொழிகளில் ஒளிபரப்பாகி வந்தது. இதில் தொகுப்பாளர்களாக பாலிவுட் நடிகர் அமிதாப் முதல் தமிழில் சூர்யா வரை தொகுத்து வழங்கினர். இதையடுத்து தொடங்கப்பட்ட நிகழ்ச்சிதான் பிக்பாஸ். தற்போது அனைத்து மொழிகளிலும் பல சீசன்கள் கடந்து வெற்றிப்பெற்று வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இதேபோன்று மற்ற மொழிகளில் முன்னணி நடிகர்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

முதல்முறையாக டிவி தொகுப்பாளராகும் நடிகை தமன்னா.. எந்த நிகழ்ச்சியில் தெரியுமா ?

இதையடுத்து பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பலமொழிகளில் ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சிதான் ‘மாஸ்டர் செஃப்’. சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த நிகழ்ச்சி தற்போது பலமொழிகளில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தமிழில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவிருக்கிறார். இதேபோன்று கன்னடத்தில் நடிகர் சுதீப் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில் தெலுங்கில் யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி எழுந்தது. அந்த வகையில் நடிகை தமன்னா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருப்பதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சிக்காக சமந்தாவுக்கு பெரும் தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த நிகழ்ச்சி மூன்று மொழிகளில் ஒளிப்பரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story