பிரபல சீரியல் நடிகர் திடீரென மரணம்… சோகத்தில் சின்னத்திரை

பிரபல சீரியல் நடிகர் திடீரென மரணம்… சோகத்தில் சின்னத்திரை

பிரபல சீரியல் நடிகர் குட்டி ரமேஷ் திடீரென உயிரிழந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொரானா தாக்கம் நாளுக்குநாள் உச்சத்தை அடைந்து வருகிறது. கொரானா தொற்றுக்கு சமீபகாலமாக ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் உயிரிழந்து வருகின்றனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு, பெட் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சனை நாட்டில் நிலவி வருகிறது. என்ன செய்வது என்று தெரியாமல் தமிழகம் தத்தளித்து வருகிறது.

பிரபல சீரியல் நடிகர் திடீரென மரணம்… சோகத்தில் சின்னத்திரை

இதுபுறம் இருக்க தமிழ் சினிமாவுக்கு என்னாயிற்று என்று தெரியவில்லை. சமீபகாலமாக ஒன்றன்பின் ஒன்றாக பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். ஏற்கனவே, நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன், இயக்குனர் கே.வி.ஆனந்த் என வரிசையாக சினிமாத்துறையை சார்ந்த முக்கிய பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் திரையுலகமே அதிர்ச்சியில் இருந்து வருகிறது.

பிரபல சீரியல் நடிகர் திடீரென மரணம்… சோகத்தில் சின்னத்திரை

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ‘தேன்மொழி பி.ஏ. ஊராட்சிமன்ற தலைவர்’ என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நாயகியின் தந்தையாக நடித்து வருபவர் பிரபல சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ். இவர் இன்று திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இவரின் மறைவுக்கு தேன்மொழி சீரியல் குழுவினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this story