கொரானாவால் தாமதமாக தொடங்கும் பிக்பாஸ் சீசன் 5.. எப்போது தெரியுமா ?

கொரானாவால் தாமதமாக தொடங்கும் பிக்பாஸ் சீசன் 5.. எப்போது  தெரியுமா ?

பிக்பாஸ் சீசன் 5 கடந்த ஆண்டை போன்று துவங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரானாவால் தாமதமாக தொடங்கும் பிக்பாஸ் சீசன் 5.. எப்போது  தெரியுமா ?

விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக பிரம்மாண்டமாக ஒளிப்பரப்பாகி வருகிறது பிக்பாஸ். இதுவரை 4 சீசன்கள் கோலகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் விறுவிறுப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே ஆரவ், ரித்விகா, முகென் ராவ், ஆரி ஆகியோர் டைட்டில் வின்னராக தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கொரானாவால் தாமதமாக தொடங்கும் பிக்பாஸ் சீசன் 5.. எப்போது  தெரியுமா ?

பிக்பாஸின் கடந்த மூன்று சீசன்கள் ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு மட்டும் கொரானா தொற்று காரணமாக பிக்பாஸ் 4 அக்டோபர் மாதம் தொடங்கி இந்தாண்டு ஜனவரி 16-ந் தேதி வரை நடைபெற்றது. இதற்கிடையே பிக்பாஸ் சீசன் 5 வழக்கமான நடத்தும் ஜூன் மாதம் நடத்த போட்டி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டனர். ஆனால் இந்த ஆண்டும் கொரானா தாக்கம் அதிகமாக இருப்பதால் போட்டி தள்ளி வைக்கப்பட்டது.

கொரானாவால் தாமதமாக தொடங்கும் பிக்பாஸ் சீசன் 5.. எப்போது  தெரியுமா ?

இந்நிலையில் கடந்த ஆண்டை போன்று அக்டோபர் மாதத்தில் பிக்பாஸ் 5வது சீசனை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த சீசனில் நடிகர்கள் ராதாரவி, மன்சூர் அலிகான், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோன்று ‘குக் வித் கோமாளி’ போட்டியாளர்கள் கனி, சுனிதா, பவித்ரா, இனியன், விஜே வினோத், ஷகிலாவின் வளர்ப்பு மகள் மிலா ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story