மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் கண்ணன் - ஐஸ்வர்யா... உச்சக்கட்ட கோவமாக போகும் மூர்த்தி !

கண்ணன் - ஐஸ்வர்யா வாங்கிய கடனுக்காக மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொள்வதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுகிறது.
விஜய் டிவியில் பரபரப்புக்கு பஞ்சாமில்லாமல் ஒளிப்பரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். ஒற்றுமையாக இருந்த அண்ணன், தம்பிகள் தற்போது தனிதனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் பாண்டியன் ஸ்டோர் குடும்பமே நிலைக்குலைந்து போயுள்ளது. இவர்கள் எப்போது ஒன்று சேர்வார்கள் என்று இல்லத்தரசிகள் காத்திருக்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் தனியாக வாழ்ந்து காட்டுவோம் என்று கூறி கண்ணன் - ஐஸ்வர்யா தம்பதி பிரிந்து செல்கின்றனர். தனியாக சென்ற அவர்கள் ஆடம்பரமாக செலவு செய்து வருகின்றனர். அதற்காக கிரேடிட் கார்டில் செலவு செய்யும் அவர்கள் ஈஎம்ஐ கட்ட முடியாமல் தவிக்கின்றனர். அப்போது வங்கி அதிகாரிகள் பணத்தை கட்ட பிரச்சனை செய்கின்றனர். அப்போது கதிரை அடித்து விடுகின்றனர்.
இதை கேள்விப்படும் கதிர் வங்கி அதிகாரிகளை அடித்து துவம்சம் செய்கிறார். வங்கி ஊழியர்களை தாக்கி கதிர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார். 5 லட்சம் கொடுத்தால் மட்டுமே புகாரை வாபஸ் வாங்குவோம் என்று வங்கி தரப்பில் கூறப்படுகிறது. பணத்தை எப்படியோ கொடுத்து கதிரை மீட்டு வந்துவிட்டனர். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது.
இதனால் கண்ணன் - ஐஸ்வர்யா தம்பதியினரை பழையபடி வீட்டிற்கு கூப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் வளைக்காப்புக்காக ஐஸ்வர்யா சித்தியிடம் 2 லட்சம் கண்ணன் கடன் வாங்கினார். தற்போது அந்த கடனை கட்ட வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் கண்ணன் - ஐஸ்வர்யா தம்பதி கலக்கமடைக்கின்றனர். இந்த விஷயம் குடும்பத்தினருக்கு தெரியாமல் இருக்கும் நிலையில் அடுத்து என்னவாகும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.