திரிஷ்யம் 2- ல் தமிழின் முன்னணி நடிகை… வைரலாகும் வீடியோ..

திரிஷ்யம் 2- ல் தமிழின் முன்னணி நடிகை… வைரலாகும் வீடியோ..

தெலுங்கில் உருவாகி வரும் திரிஷ்யம் 2-ல் நடிகை நதியா இணைந்துள்ளதாக தனது இன்ஸ்ட்கிராமில் பதிவிட்டுள்ளார்.

திரிஷ்யம் 2- ல் தமிழின் முன்னணி நடிகை… வைரலாகும் வீடியோ..

மலையாளத்தில் மோகன் லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளிவந்த படம் ‘திரிஷ்யம்’. இந்த படத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார்.  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பலமொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

திரிஷ்யம் 2- ல் தமிழின் முன்னணி நடிகை… வைரலாகும் வீடியோ..

திரிஷ்யம் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் வெளியாகி மலையாளத்தில் மாபெரும் ஹிட்டடித்தது. இதையடுத்து தெலுங்கில் திரிஷ்யம் 2 படத்தை ரீமேக் செய்து வருகிறார் ஜீத்து ஜோசப். படத்தின் ஷூட்டிங் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதில் வெங்கடேஷ், மீனா ஆகியோர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தில் நடிகை பூர்ணா வழக்கறிஞர் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமானார்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகை நதியா இணைந்திருப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் திரிஷ்யம் 2 படத்திற்காக தனக்கு மேக்கப் செய்யும் காட்சிகள் அவை. இந்த படத்தில் நதியா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story