தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் இன்று எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற்றது. எப்போதும் தேர்தல் அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஆனால் தற்போது கொரோனா பெருந்தொற்று காலம் நிலவி வருவதால் நாளை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இன்று நடைபெற்ற தேர்தலில், மொத்தம் 1304 வாக்குகளில் 1050 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!

ரஜினிகாந்த், தனுஷ், பாரதிராஜா, ஏ.வி.எம் சரவணன், எஸ்.பி சரண் என சிலர் வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

முரளி, டி.ராஜேந்தர், பி.எல்.தேனப்பன் ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். யார் தலைவராகப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வருகிறது.

Share this story