“தலைவரோட எனர்ஜி வேற லெவல்”… ரஜினி குறித்து மனம் திறந்த சூரி!

“தலைவரோட எனர்ஜி வேற லெவல்”… ரஜினி குறித்து மனம் திறந்த சூரி!

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் ரஜினி மற்றும் சிறுத்தை சிவா பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

விறுவிறுப்பாக நடந்து வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா, ரஜினி உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் தாமதமாகி வந்தது. தற்போது மீண்டும் ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

“தலைவரோட எனர்ஜி வேற லெவல்”… ரஜினி குறித்து மனம் திறந்த சூரி!

இந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். நடிகர் சூரியும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தற்போது சூரி இந்தப் படத்தில் நடித்த பிறகு ரஜினிகாந்த் பற்றி மனம் தீர்ந்துள்ளார். “தலைவர் ஷுட்டிங் ஸ்பாட்டில் கலக்குறாரு, வேற லெவல் எனர்ஜி. அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.  

“தலைவரோட எனர்ஜி வேற லெவல்”… ரஜினி குறித்து மனம் திறந்த சூரி!

அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இமான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தாண்டு நவம்பர் 4-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு இந்தப் படம் வெளியாகிறது.

Share this story