‘தளபதி 65’ படத்தின் பூஜை … நிகழ்ச்சியின் வீடியோவை வெளியிட்ட படக்குழு…

‘தளபதி 65’ படத்தின் பூஜை … நிகழ்ச்சியின் வீடியோவை வெளியிட்ட படக்குழு…

விஜய் – நெல்சன் கூட்டணியில் உருவாக உள்ள படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

‘தளபதி 65’ படத்தின் பூஜை … நிகழ்ச்சியின் வீடியோவை வெளியிட்ட படக்குழு…

தளபதி 65-வது படத்தின் பணிகளால் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது படக்குழு. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிரூத் இசையில் உருவாகும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற இருக்கிறார். அன்பறிவ் சகோதரர்களும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

‘தளபதி 65’ படத்தின் பூஜை … நிகழ்ச்சியின் வீடியோவை வெளியிட்ட படக்குழு…

மொத்தம் 90 நாட்கள் ஷூட்டிங்கை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. முதற்கட்ட ஷூட்டிங் ரஷ்யாவில் நடைபெற உள்ளது. அந்நாட்டு அனுமதிக்காக காத்திருக்கும் படக்குழு, விரைவில் அந்நாட்டு செல்ல உள்ளது. இந்த இடைவெளியில் சென்னையில் பாடல் காட்சிகளை படப்பதிவு செய்ய நெல்சன் முடிவு செய்யவுள்ளார்.அதற்காக பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடியவுள்ளது.

‘தளபதி 65’ படத்தின் பூஜை … நிகழ்ச்சியின் வீடியோவை வெளியிட்ட படக்குழு…

இந்நிலையில் ‘தளபதி 65’ படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சென்னை சன் டுடியோவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்சியில் நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன், பிக்பாஸ் கவின் உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பை சன் பிக்சர்ஸ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

Share this story