மாஸாக நடைபெற்ற ‘தளபதி 65’ படப்பூஜை… விஜய் பங்கேற்பு… #Thalapathy 65

மாஸாக நடைபெற்ற ‘தளபதி 65’ படப்பூஜை… விஜய் பங்கேற்பு… #Thalapathy 65

விஜய் நடிக்கும் 65வது படத்தின் பூஜை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

மாஸாக நடைபெற்ற ‘தளபதி 65’ படப்பூஜை… விஜய் பங்கேற்பு… #Thalapathy 65

தளபதி 65-வது படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நெல்சன் இயக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற இருக்கிறார். அன்பறிவ் சகோதரர்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதால் நிறைய சண்டைக்காட்சிகளை படத்தில் எதிர்ப்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

மாஸாக நடைபெற்ற ‘தளபதி 65’ படப்பூஜை… விஜய் பங்கேற்பு… #Thalapathy 65

மொத்தமாக 90 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள முதற்கட்ட ஷூட்டிங்கை ரஷ்யாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்நாட்டிற்கு செல்ல அனுமதி கிடைக்காததால் முதலில் ஷூட்டிங்கை சென்னையில் ஆரம்பிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாஸாக நடைபெற்ற ‘தளபதி 65’ படப்பூஜை… விஜய் பங்கேற்பு… #Thalapathy 65

அதற்காக பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிந்துவிட்டால் பாடல் காட்சிகளுக்களை எடுக்க படக்குழு ரெடியாகி வருகிறது. இந்நிலையில் ‘தளபதி 65’ படத்தின் பூஜை பிரம்மாண்டமாக சென்னையில் நடந்தது. இதில் நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். இதையடுத்து தேர்தல் முடிந்தவுடன் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Share this story