துபாய் பறக்கும் விஜய்… ‘தளபதி 65’ படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

துபாய் பறக்கும் விஜய்… ‘தளபதி 65’ படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் துவங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

விஜய் தனது அடுத்த படத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

துபாய் பறக்கும் விஜய்… ‘தளபதி 65’ படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தப் படத்திற்கு தற்போது தளபதி 65 படத்தின் மூலம் தான் மீண்டும் தமிழில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார்.

துபாய் பறக்கும் விஜய்… ‘தளபதி 65’ படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

தற்போது வரும் ஏப்ரல் 2-ம் தேதி இந்தப் படம் துவங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னையில் படத்தின் தொடக்கவிழா நடத்தி பின்னர் சில நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடத்திவிட்டு சார்ஜா செல்லவிருக்கிறார்களாம்.

ஷார்ஜாவில் பதினைந்து நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர். அதையடுத்து தான் அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கு நடத்தப்படும் என்பது முடிவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

Share this story