ஜார்ஜியாவில் தொடங்கிய ‘தளபதி 65’… மாஸ் லுக்கில் மிரட்டும் விஜய்!

ஜார்ஜியாவில் தொடங்கிய ‘தளபதி 65’… மாஸ் லுக்கில் மிரட்டும் விஜய்!

தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் துவங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் தளபதி 65 படத்திற்காக படக்குழுவினர் ஜார்ஜியா பறந்துள்ளனர். ஜார்ஜியாவில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

Image

தற்போது ஜார்ஜியா நாட்டில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் நெல்சன் மற்றும் விஜய் இருவரும் காட்சியைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. பின்னர் பெரிய செட் அமைப்பது போன்றும் காணப்படுகிறது. தொடர்ந்து அப்டேட் வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து வருகின்றனர்.

ஜார்ஜியாவில் கிட்டத்தட்ட 16 நாட்கள் படப்பிடிப்பு நடத்த இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் படப்பிடிப்பி துரிதப் படுத்தும் நெருக்கடியிலும் படக்குழுவினர் உள்ளனர்.

தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

Share this story