பிஸி செட்யூலிலும் ஸ்ரீமனை சந்தித்த விஜய் – “உன் நல்ல மனசுக்கு நல்லாருப்ப” என நெகிழ்ச்சி!

பிஸி செட்யூலிலும் ஸ்ரீமனை சந்தித்த விஜய் – “உன் நல்ல மனசுக்கு நல்லாருப்ப” என நெகிழ்ச்சி!

மாஸ்டர் படத்தை வெளியிடுவதற்கான பரபரப்பான சூழ்நிலையிலும் தன்னுடைய வேண்டுகோளை ஏற்று சந்தித்த நடிகர் விஜய்யை அவரின் நண்பரும் நடிகருமான ஸ்ரீமன் நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.

நடிகர் விஜய்யும் ஸ்ரீமனும் மிக நெருங்கிய நண்பர்கள். விஜய்யின் ஆரம்பகால படங்களிலிருந்து தற்போது வரை அவருடன் இணைந்து ஸ்ரீமன் இணைந்து நடித்திருக்கிறார். நெஞ்சினிலே, லவ் டுடே, பிரெண்ட்ஸ், போக்கிரி, அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட படங்கள் அதில் அடக்கம். விஜய் அவ்வப்போது தனது நண்பர்களை மறக்காமல் சந்திப்பதுண்டு.

பிஸி செட்யூலிலும் ஸ்ரீமனை சந்தித்த விஜய் – “உன் நல்ல மனசுக்கு நல்லாருப்ப” என நெகிழ்ச்சி!

அந்த வகையில் நேற்று ஸ்ரீமனைச் சந்தித்துள்ளார். விஜய்யுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அப்பதிவில், “ஒரு படம் வெளியிடுவதற்கு முந்தைய நாள் அதில் நடித்த நடிகருக்கு எவ்வளவு வேலைகள் இருக்கும் என்பதை நான் அறிவேன். அது சந்திப்பிற்கான நேரமும் இல்லை. இருப்பினும், அவசரமாகச் சந்திக்க வேண்டும் என விஜய்யுடன் கூறினேன்.

அவன் எதைப் பற்றியும் யோசிக்காமல், “வா ஸ்ரீ பாக்கலாம்” என்றான். நட்பிற்கு விஜய் கொடுக்கும் முக்கியவத்துவம் கற்பனை செய்ய முடியாத ஒன்று. உன்னுடைய உழைப்புக்கும் கனிவான உள்ளத்திற்கும் நீ எப்போதும் நல்லாருப்ப. லவ் யூ” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்தப் பதிவை விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பலரும் பகிர்ந்து விஜய்யைப் பாராட்டிவருகின்றனர்.

Share this story