விஜய்யுடன் ஜோடிப்போடும் ஹீரோயின் யார் ? தளபதி65 அப்டேட்… #Thalapathy65

விஜய்யுடன் ஜோடிப்போடும் ஹீரோயின் யார் ? தளபதி65 அப்டேட்… #Thalapathy65

தளபதி 65ல் விஜய்யுடன் நடிக்கும் ஹீரோயின் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து மாபெரும் வெற்றிப்பெற்ற படம் மாஸ்டர். திரையரங்குகளில் வெளியான இந்த படம் 100கோடி வசூலை ஈட்டியுள்ளது. ரசிகர்களிடையே அமோக ஆதரவை பெற்று இன்றுடன் 25 நாள்கள் முடிவடைந்து வெற்றி நடைபோட்டு வருகிறது.

விஜய்யுடன் ஜோடிப்போடும் ஹீரோயின் யார் ? தளபதி65 அப்டேட்… #Thalapathy65

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்யின் அடுத்த படத்தை நெல்சன் இயக்குகிறார். பெயரிடாத இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிரூத் இசையமைக்கிறார் என்ற தகவலை தவிர வேற எந்த தகவலுக்கு வராமல் இருந்தது. ரசிகர்களும் இந்த படத்தின் அப்டேட் எப்போது வரும் காத்திருந்த நிலையில் புதிய தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன.

விஜய்யுடன் ஜோடிப்போடும் ஹீரோயின் யார் ? தளபதி65 அப்டேட்… #Thalapathy65

விஜய்யின் 65வது படமாக உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்தவுடன் வரும் ஏப்ரலில் விஜய் 65 படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. 60 நாட்களில் இந்த படத்தின் ஷூட்டிங்கை முடிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் விஜய் 65 படம் வரும் தீபாவளிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யுடன் ஜோடிப்போடும் ஹீரோயின் யார் ? தளபதி65 அப்டேட்… #Thalapathy65

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யிக்கு ஜோடியாக யார் நடிப்பார் என எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இதையடுத்து மூன்று நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கியாரா அத்வானி, பூஜா ஹேக்டே ஆகியோருடன் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Share this story