பிளாக்பஸ்டர் படங்களின் பிதாமகன்… கேஎஸ் ரவிக்குமார் பிறந்ததின சிறப்புப் பதிவு!

பிளாக்பஸ்டர் படங்களின் பிதாமகன்… கேஎஸ் ரவிக்குமார் பிறந்ததின சிறப்புப் பதிவு!

கோலிவுட் இந்தியாவின் மூன்றாவது பெரிய திரைத்துறையாக இருக்கிறது. ரஜினி, கமல் போன்ற முன்னணி தமிழ் நடிகர்கள் இந்தியாவையும் தாண்டி உலகளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றனர். அதற்கு காரணம் தமிழ் சினிமாவில் திறமையான இயக்குனர்கள் தான். தமிழ் சினிமாவில் எததனையோ திறமையான இயக்குனர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். பல முன்னோடியான படைப்புகளைக் கொடுத்திருக்கிறார்கள். அதிலும் மிக முக்கியமானவர்கள் கமர்ஷியல் இயக்குனர்கள்.

எதார்த்த படங்களை விட கமர்ஷியல் படங்கள் எடுத்து வெற்றி பெறுவது தான் மிகவும் கடினம். ஏனெனில் எதார்த்தக் கதைக்களம் பெரும்பாலும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் கமர்ஷியல் படங்கள் அப்படியில்லை. நம்முடைய கற்பனைக்கு அங்கு மிகப்பெரிய வேலை இருக்கும். அதை மக்களுக்கு பிடித்தவாறு கொண்டு போய் சேர்க்க வேண்டும். பொழுதுபோக்கிற்காக வரும் மக்களை படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை தொய்வு இல்லாமல் படத்தோடு பயணிக்க வைக்க வேண்டும்.

பிளாக்பஸ்டர் படங்களின் பிதாமகன்… கேஎஸ் ரவிக்குமார் பிறந்ததின சிறப்புப் பதிவு!

அப்படி வெற்றி கண்ட தமிழ் சினிமாவின் சிறந்த கமர்ஷியல் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் கேஎஸ் ரவிக்குமார்.

‘புதுவசந்தம்’ படத்தில் விக்ரமனுக்கு உதவி இயக்குனராகப் பணி புரிந்தது மூலம் தனது சினிமா பயணத்தைத் துவங்கினார் கேஎஸ் ரவிக்குமார்.

அந்தப் படத்தின் ரவிக்குமாரின் திறமையைப் பார்த்த தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி முதல் படம் இயக்கும் வாய்ப்பைக் கொடுக்கிறார். அந்தப் படம் தான் ‘புரியாத புதிர்’. கன்னடத்தில் வெளியான ‘தர்கா’ என்ற படத்தின் ரீமேக் தான் புரியாத புதிர். முதல் படத்தை திறம்பட இயக்கி தமிழ் சினிமாவில் கவனம் பெற்றார் கேஎஸ் ரவிக்குமார்.

அதையடுத்து சரத்குமார் மற்றும் மோகன்பாபு நடிப்பில் ‘சேரன் பாண்டியன்’ படத்தை இயக்கினார். இரண்டாவது படமும் ஹிட். இந்தப் படத்தில் சரத்குமார்- ரவிக்குமார் இருவருக்கும் ஏற்பட்ட புரிதல் அடுத்த இவர்கள் காம்போவில் வெளியாகி மெஹா ஹிட் வெற்றி பெற்ற படங்களுக்கு விதையாக அமைந்தது.

அடுத்து ‘புத்தம் புது பயணம்’ முதல் ‘சக்திவேல்’ வரை 7 படங்கள் இயக்கினார். அதையடுத்து தமிழ் சினிமாவின் மெஹா பிளாக்பஸ்டர் படமான ‘நாட்டாமை’ படத்தை இயக்கினார். 200 நாட்கள் வரை ஓடிய அப்படம் 90-களில் வெளியான பல படங்களுக்கு ட்ரெண்ட்செட்டராக அமைந்தது.

பிளாக்பஸ்டர் படங்களின் பிதாமகன்… கேஎஸ் ரவிக்குமார் பிறந்ததின சிறப்புப் பதிவு!

அதுமட்டுமில்லாமல் ‘டேய் தகப்பா- மை சன்’ என்ற கவுண்டமணி-செந்தில் காமெடியையும் கொடுத்தது. இந்தப் படத்தை அடுத்து தமிழ் ஸ்டார் இயக்குனர் ஆனார் கேஎஸ் ரவிக்குமார்.

பின்னர் 1995-ம் ஆண்டு முதன்முறை ரஜினியுடன் கூட்டணி அமைத்து ‘முத்து’ படத்தை இயக்கினார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘தேமாவின் கொம்பத்’ படத்தின் தமிழ் ரீமேக் தான் முத்து. முத்து சில்வர் ஜூப்ளி கண்ட வெற்றிப் படமாக அமைந்தது. மேலும் இந்தப் படம் ஜப்பானீஸ் மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அங்கும் படம் வெற்றி பெற்று ஜப்பானிய மொழியில் அதிக வசூல் குவித்த இந்தியப் படம் என்ற சாதனையையும் படைத்தது.

பிளாக்பஸ்டர் படங்களின் பிதாமகன்… கேஎஸ் ரவிக்குமார் பிறந்ததின சிறப்புப் பதிவு!

அதுவரை இளையரஜா, தேவா என்ற முன்னணி இயக்குனர்களுடன் மட்டும் தான் ரஜினி கூட்டணி அமைத்து வந்தார். முத்து படத்தின் மூலம் ஏஆர் ரஹ்மானை முதன்முறையாக ரஜினி படத்திற்கு இசையமைக்க வைக்கிறார் ரவிக்குமார். பலரும் வேண்டாம் என்றாலும் ரஹ்மானின் திறமையின் மீது நம்பிக்கை வைத்து அந்த வாய்ப்பை வழங்கினார். ஏனெனில் மேலும் அந்தக் காலம் ரஜினி இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும் நடிகராக உயர்ந்திருந்தார். எனவே ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று பலர் கூறினர். ஆனால் ஏஆர் ரஹ்மான் கேஎஸ் ரவிக்குமார் தனக்கு வழங்கிய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

1996-ம் ஆண்டு கமல் உடன் கூட்டணி அமைத்து ‘அவ்வை சண்முகி’ படத்தை இயக்கினார். இந்தப் படம் கேஎஸ் ரவிக்குமாருக்கும் கமலுக்கும் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தியது. கேஎஸ் ரவிக்குமார் எப்போதும் விரைவாக வேலையை முடிக்கும் இயக்குனர். குறிப்பிட்ட நாட்களுக்குள் படத்தை முடித்துவிடுவார். எனவே கமல் தான் எழுதிய பல கதைகளுக்கு கேஎஸ் ரவிக்குமாரையே இயக்குனராக பணிபுரிய வைத்தார்.

கமர்ஷியலில் கலக்கி வந்த கேஎஸ் ரவிக்குமார் ‘பிஸ்தா’ படத்தின் மூலம் முழு நேர காமெடியிலும் தன் திறமையை நிரூபித்தார். பிஸ்தா 100 நாட்களுக்கு மேல் ஓடி பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. அடுத்து நட்புக்காக என்னும் பிளாக்பஸ்டர் படம் கொடுத்தார்.

பிளாக்பஸ்டர் படங்களின் பிதாமகன்… கேஎஸ் ரவிக்குமார் பிறந்ததின சிறப்புப் பதிவு!

அதையடுத்து தான் மீண்டும் ரஜினி உடன் கூட்டணி அமைத்து இந்திய சினிமாவைத் திரும்பிப் பார்க்க வைத்த ‘படையப்பா’ என்னும் மெஹாஹிட் வெற்றிப் படத்தைக் கொடுத்தார். இந்தப் படம் தான் அதிக தியேட்டர்களில் வெளியான முதல் தமிழ் படம். அதுமட்டுமில்லாமல் இதுவரை வெளியான தமிழ் படங்களிலே அதிக வசூல் சாதனை படமாகவும் மாறியது. ரஜினியின் கேரியரை வானளவுக்கு உயர்த்தியதில் கேஎஸ் ரவிக்குமாருக்கு மிகப்பெரிய பங்குண்டு.

பிளாக்பஸ்டர் படங்களின் பிதாமகன்… கேஎஸ் ரவிக்குமார் பிறந்ததின சிறப்புப் பதிவு!

அதன்பிறகு தெனாலி, பஞ்சதந்திரம், தசாவதாரம் என கமல் உடன் கூட்டணி அமைக்கும் அனைத்து படங்களிலும் ஹிட் கொடுத்தார். தசாவதாரம் படத்தை அடுத்து கேஎஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் சற்று சரிவு ஏற்பட்டது. புதிய தலைமுறையினரை ரவிக்குமார் படங்கள் கவரத் தவறிய காலகட்டம். கேஎஸ் ரவிக்குமார் கடைசியாக தமிழில் இயக்கிய படம் ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா. அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. அதன்பிறகு கேஎஸ் ரவிக்குமார் தமிழில் வேறு படங்கள் இயக்கவில்லை. தற்போது முழு நேர நடிகராக மாறியுள்ளார்.

தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற இயக்குனர்களில் மிக முக்கியமானவர் கேஎஸ் ரவிக்குமார். அவர் தமிழ் சினிமாவுக்கு ஆற்றியுள்ள பங்கு அளப்பரியது. இந்திய சினிமாவின் திறமையான கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து பெருமிதம் கொள்கிறோம்.

Share this story