விறுவிறுப்பாக நடைபெறும் ‘தி கிரேக் இந்தியன் கிச்சன்’ படத்தின் ஷூட்டிங்…

விறுவிறுப்பாக நடைபெறும் ‘தி கிரேக் இந்தியன் கிச்சன்’ படத்தின் ஷூட்டிங்…

‘தி கிரேக் இந்தியன் கிச்சன்’ தமிழ் ரீமேக் படத்தின் ஷூட்டிங் விறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த படத்தில் யோகிபாபு கலந்துகொண்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

விறுவிறுப்பாக நடைபெறும் ‘தி கிரேக் இந்தியன் கிச்சன்’ படத்தின் ஷூட்டிங்…

கடந்த ஜனவரி மாதம் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த படம் ‘தி கிரேக் இந்தியன் கிச்சன்’. ஜோ பேபி இயக்கிய இப்படம் விமர்சன ரீதியாகயும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்திருந்தனர். இவர்கள் நடிப்பும் அனைவராலும் பாராட்டப் பெற்றது.

விறுவிறுப்பாக நடைபெறும் ‘தி கிரேக் இந்தியன் கிச்சன்’ படத்தின் ஷூட்டிங்…

இந்த படம் தற்போது தமிழில் ரீமேக்காகி வருகிறது. ‘பிஸ்கோத்’ படத்தை இயக்கிய கண்ணன் இந்த படத்தின் ரீமேக் உரிமையை பெற்று இயக்கி வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். காமெடி நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் இப்படம் உருவாகி வெளியாகவுள்ளது.

விறுவிறுப்பாக நடைபெறும் ‘தி கிரேக் இந்தியன் கிச்சன்’ படத்தின் ஷூட்டிங்…

இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சி கடந்த மார்ச் 3ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காரைக்குடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஷூட்டிங் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் யோகிபாபு உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Share this story