ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்”… படப்பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்…

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்”… படப்பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்…

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்”… படப்பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்…

‘தி கிரேக் இந்தியன் கிச்சன்’, இந்த பெயரை கேட்டாலே, ஏதோ சமையல் சார்ந்த படம் என்று தோன்றும். ஆனால் இந்த படத்தின் கதையே வேறு.  ஆணாதிக்கமும், மதமும், பெண்களுக்கு எப்படியான உலகத்தையும் தருகிறது என்பதை துளியும் குறைவில்லாமல் காட்சிப்படுத்தி மாபெரும் ஹிட்டடித்த படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. கடந்த ஜனவரி மாதம் வெளியான இப்படத்தை ஜோ பேபி இயக்கியுள்ளார். இந்த படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்திருந்தனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்”… படப்பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்…

மலையாளத்தில் மாபெரும் வெற்றிப்பெற்ற இப்படம் தமிழில் ரீமேக்காகிறது. இந்த படத்தின் ரீமேக் உரிமையை இயக்குனர் கண்ணன் பெற்றுள்ளார். மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ள இவர், ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை, வந்தான் வென்றான், பிஸ்கோத் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்”… படப்பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்…

தற்போது அதர்வாவுடன் ‘தள்ளிப்போகாதே’ படத்தினை இயக்கி வரும் இவர், அடுத்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளார். இதில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்”… படப்பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்…

இந்நிலையில் இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் கண்ணன், படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இந்த படத்தின் ஷூட்டிங் இன்றே துவங்கவுள்ளதாகவும், காரைக்குடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஷூட்டிங் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share this story