தனுஷை புகழ்ந்த ஹாலிவுட் இயக்குனர்… ‘தி கிரே மேன்’ குறித்து வெளியான முக்கிய அப்டேட்…

தனுஷை புகழ்ந்த ஹாலிவுட் இயக்குனர்… ‘தி கிரே மேன்’ குறித்து வெளியான முக்கிய அப்டேட்…

நடிகர் தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷை புகழ்ந்த ஹாலிவுட் இயக்குனர்… ‘தி கிரே மேன்’ குறித்து வெளியான முக்கிய அப்டேட்…

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். அவர் ஏற்கனவே நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகீர்’. இந்த படத்தையடுத்து தனுஷ் நடிக்கவிருக்கும் ஹாலிவுட் படம் ‘தி கிரே மேன்’. மெகா பட்ஜெட்டில் உருவாகி இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்பதற்காக கடந்த மாதமே தனுஷ் அமெரிக்காவுக்கு சென்றார்.

தனுஷை புகழ்ந்த ஹாலிவுட் இயக்குனர்… ‘தி கிரே மேன்’ குறித்து வெளியான முக்கிய அப்டேட்…

மார்க் கிரேனி என்பவர் எழுதிய ‘தி கிரே மேன்’ என்ற நாவலை மையமாக இந்த கதை படமாக உருவாகிறது. இந்த படத்தை அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் இணைந்து இயக்கி வருகின்றனர்.  இதில் ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரயான் காஸ்லிங், கிறிஸ் ஈவென்ஸ் ஆகியோருடன் இணைந்து தனுஷ் நடித்து வருகிறார்.

தனுஷை புகழ்ந்த ஹாலிவுட் இயக்குனர்… ‘தி கிரே மேன்’ குறித்து வெளியான முக்கிய அப்டேட்…

இந்த படத்தில் கொலை, கொள்ளை செய்யும் கூட்டத்தின் தலைவராக தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவில் 2 மாதங்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியுள்ளது. இதனை இப்படத்தின் இயக்குனர்களான ரூஸோ சகோதரர்கள் டுவிட்டர் மூலம் உறுதிப்படுத்தி உள்ளனர். வருகிற 2022-ம் ஆண்டு நேரடியாக நெட்பிளிக்ஸ் இந்த படம் நேரடியாக வெளியிட உள்ளனர்.

தனுஷை புகழ்ந்த ஹாலிவுட் இயக்குனர்… ‘தி கிரே மேன்’ குறித்து வெளியான முக்கிய அப்டேட்…

இந்த படம் குறித்து இயக்குனர் மார்க் கிரேனி ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் ஹாலிவுட் படத்தில் நடிப்பது எனக்கு பிடித்திருக்கிறது. தனுஷ் குறித்து எனக்கு எதுவும் தெரியாமல் இருந்தது. ஆனால் ட்விட்டர் பக்கத்தில் என்னை 6000 பேர் பின் தொடர்கிறார்கள். ஆனால் இந்திய நடிகரான தனுஷ் என்னை பின்தொடர்வது தான் பெரிய விஷயம். அவரை 9.7 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story