’தி க்ரே மேன்’ படப்பிடிப்பு கொரோனாவால் ஒத்திவைப்பு…

’தி க்ரே மேன்’ படப்பிடிப்பு கொரோனாவால் ஒத்திவைப்பு…

ரயன் காஸ்லிங், க்றிஸ் ஈவன்ஸ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தி க்ரே மேன்’. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் தயாரிக்கும் இந்தப் படத்தை ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’, ‘எண்ட்கேம்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர்கள் ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர். இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.’தி க்ரே மேன்’ படப்பிடிப்பு கொரோனாவால் ஒத்திவைப்பு…

கடந்த வியாழக்கிழமை (17.12.20) அன்று இந்தத் தகவலை நெட்ஃபிளிக்ஸ் உறுதி செய்தது. இதனையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் தனுஷுக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் தொடங்கவிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கலிஃபோர்னியா மாகாணத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ’தி க்ரே மேன்’ படப்பிடிப்பு கொரோனாவால் ஒத்திவைப்பு…

படப்பிடிப்பில் அதிக நபர்கள் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் படப்பிடிப்பை ஒத்திவைத்திருப்பதாகத் கூறப்படுகிறது.

Share this story