வம்பில் மாட்டும் வாரிசு இசையமைப்பாளர்.!?

வம்பில் மாட்டும் வாரிசு இசையமைப்பாளர்.!?

‘தெரிஞ்ச வேலையைச் செய்யாதவனும் கெட்டான்… தெரியாத வேலையைத் தொட்டவனும் கெட்டான்’ என்று கிராமத்துப் பக்கம் ஒரு வழக்குச் சொல் உண்டு. அது வாரிசு இசையமைப்பாளருக்கு தான் இப்போது பொருந்தும். அவர் பாட்டுக்கு இசையமைச்சுக்கிட்டு ஜாலியா இருக்கிறதை விட்டு சொந்தப் படம் தயாரிக்கிறேன் என்று கிளம்பியதில் இப்போ ஏகப்பட்ட சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறார்!

வம்பில் மாட்டும் வாரிசு இசையமைப்பாளர்.!?

யாரைப் பார்த்தாலும் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிற புதுமை நடிகர்தான் அந்தப் படத்துக்கு ஹீரோ. ஒரு மனிதனை அதிகப்படியா புகழ்ந்து சொல்லும் வார்த்தைதான் படத்தின் டைட்டில். பருவக்காற்றை படம்பிடித்தவர்தான் இந்தப் படத்துக்கும் இயக்குனர். ‘உற்சாகமான’ ஒரு மாலைப் பொழுதில் ஹீரோவோட கால்ஷீட் இருக்கு என்று கேஷுவலாக சொல்லப் போக நானே தயாரிக்கிறேன் என்று வாலண்டரியாக வந்து வண்டியில் ஏறியிருக்கிறார் வாரிசு இசையமைப்பாளர்!

வம்பில் மாட்டும் வாரிசு இசையமைப்பாளர்.!?

இசையமைப்பாளர் தயாரிகிறார் என்றதும் ஹீரோவும் பேருக்கு ஒரு அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு மொத்தப் படத்தையும் முடித்து கொடுத்திருக்கிறார். படம் வியாபாரம் ஆகும் போது சம்பளத்தைக் கொடுத்தால் போதும் என்று ஹீரோ சொன்னது வெளியில் யாருக்கும் தெரியாது என்பதால்’ அவருக்கு கொடுக்கணும் என்று சொல்லியே ஃபைனான்சியரிடம் பணம் வாங்கி தனியே ஒதுக்கிக் கொண்டாராம்.!

வம்பில் மாட்டும் வாரிசு இசையமைப்பாளர்.!?

இப்போ படத்தை ரிலீஸ் பண்ணச் சொல்லிக் கேட்கும் போதெல்லாம் சரியென்று சொல்வாராம். அப்புறம் செட்டில் அமவுண்ட் மன கண்ணில் வந்து போனதும் அப்படியே கதவடைச்சுக்கிட்டு கம்போஸிங்கில் உட்கார்ந்திருவாராம். இன்னும் எத்தனை வருசத்துக்கு இப்படியே காத்திருப்பது என்று கொதித்த தயாரிப்பாளர் பஞ்சாயத்து கூட்ட ரெடியாகிட்டார். அநேகமா வாரிசு இசையமைப்பாளர் வழுவாக மாட்டுவார் என்கிறார்கள் கோடம்பாக்கம் ஏரியாவில்! இப்போ, முடிந்தால் முதல் பாராவில் சொல்லியிருக்கிற வழக்குச் சொல்லை இன்னொரு முறை ஸ்க்ரோல் பண்ணிப் படிச்சுக்கங்க.

Share this story