Tuesday, June 15, 2021

தள்ளிப்போகிறதா ‘பாபநாசம் 2’ ?.. கமலின் திட்டம் இதுதான் !

'பாபநாசம் 2' எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குடும்ப பின்னணியை கொண்டு எடுக்கப்பட்டு பிரம்மாண்ட வெற்றிப்பெற்ற...

Movie Stills

பாதியில் ஓடிப்போன ஹீரோ… நொறுங்கிப்போன ஹீரோயின்.!?

கொரோனா குறைந்து விட்டது என்று தமிழக அரசு அறிவித்த பிறகு முகத்தில் தாடைக்கு பாதுகாப்பாகப் போட்டிருந்த மாஸ்க்கை சொல்லி வைத்த மாதிரி இன்றைக்கு காலையிலிருந்து முகத்தை முழுவதுமாக மறைத்துப் போட ஆரம்பித்திருக்கிறார்கள். காவேரி கார்னர் டீக்கடை வாசலில் இருந்தவர்கள் பலரும் மாஸ்க்கை ஒரு பக்கமாக மறைத்துக்கொண்டு டீ குடிப்பதைப் பார்க்கும் போது ஆச்சர்யமாக இருந்தது!

பாதியில் ஓடிப்போன ஹீரோ… நொறுங்கிப்போன ஹீரோயின்.!?

ஐ ஐ டி வளாகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாணவர்களை கொத்துக்கொத்தாக தூக்கியதாக செய்தி வந்ததைப் பார்த்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது! பொதுவாக காவேரி கார்னர் ஏரியாவில் சினிமா செய்திகள்தான் அடிபடும். நான்கைந்து நாளாக சின்னத்திரை செய்திகள் அதிகம் பேசப்படுவதாக இன்றைக்கு நமக்கு டீ வாங்க அழைத்துப் போன புரடக்சன் மேனேஜர் அண்ணன் சொன்னார். குறிப்பாக பாண்டியன் ஸ்டோர் முல்லையின் மரணம் குறித்த செய்திதான் ஏரியா முழுக்க பேசுபொருளாக இருக்கிறது.இன்று அவரது காதலன் கைது செய்யப்பட்டிருக்கும் தகவல் இன்னும் கூடுதலாக விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.அவர்கள் பேச்சில் கேட்ட தகவலையெல்லாம் சொன்னால் இங்கே சரியாக இருக்காது! கோர்ட் கேஸ்இல்லாமலே இவர்களாக ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள் போலிருக்கு!

பாதியில் ஓடிப்போன ஹீரோ… நொறுங்கிப்போன ஹீரோயின்.!?

ஏதோ ஒரு யூ ட்யூப் சேனலில் முன்னாள் க்ரைம் பிராஞ்ச் அதிகாரி, தூக்குப் போட்டுத் தற்கொலை பண்ணினால் என்னென்ன தடயங்கள், எப்படியெல்லாம் இருக்கும் என்று கேள்வி கேட்டது குறித்தும் பேசியத்தைக் கேட்டால் ஆச்சர்யமாக இருக்கிறது. கதை சொல்லிகளுக்கு சொல்லியா தரணும்.!? அம்புட்டுப் பேச்சுப் பேசுகிறார்கள். சின்னத்திரை பற்றிய பேச்சு வந்ததால், வழக்கம் போல் பையா கிட்ட இன்னொரு சாயா ஆளுக்கொன்னு சொல்லிவிட்டு கண்டும் காணாததுபோல் காதைக்கொடுத்தேன். அவர்கள் சொன்ன செய்தியின் ‘சுருக்’ அடுத்த பாராவிலிருந்தே…

வெற்றிகரமான ஒரு சேனலில் ஆந்திர பெண் எம்.எல்.ஏ ஒருவர் ஹீரோயினாக அறிமுகமான படத்தின் பெயரில் எடுக்கப்பட்டு ஹிட்டடித்துக்கொண்டிருக்கும் சீரியல் அது. நவரச நாயகனை நினைவூட்டும் அந்த ஹீரோவும், அவருக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயினுக்கும் அப்படியொரு ‘ஹெமிஸ்ட்ரி’ என்று ரசிகர்கள் மட்டுமல்ல சின்னத்திரை வட்டாரங்களிலேயே காது பட சொல்லிக்கொண்டுதான் இருந்தார்களாம்!

பாதியில் ஓடிப்போன ஹீரோ… நொறுங்கிப்போன ஹீரோயின்.!?

இப்போ அவருக்கு பதிலாக இன்னொரு ஹீரோ சீரியலில் நடிக்கிறார். காரணம் நவரச நாயகனுக்கு சினிமாவில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. என்னதான் சின்னத்திரையில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சினிமா வாய்ப்புக் கிடைக்கும் போது யாருக்குத்தான் கசக்கும்! சேனலுக்கு குட் பை சொல்லிட்டுப் போயிட்டார். அவருக்குப் பதிலாக வந்திருக்கும் ஹீரோவின் நடிப்பைப் பார்த்து இன்ஸ்டா தொடங்கி இன்ன பிற ஏரியா முழுக்க ரசிகர்கள் ரொம்பவும் எறங்கி அடிச்சு கமென்ட் போடுறதைப் பார்த்து சேனல் ஆட்கள் பயங்கர அப்செட்டாம்!

பாதியில் ஓடிப்போன ஹீரோ… நொறுங்கிப்போன ஹீரோயின்.!?

டிஆர்பி ரேட்டிங் குறைய ஆரம்பித்தால் என்ன பண்றத்துன்னு அவர்களுக்கு அவர்களின் கவலை. இதே சீரியல் தொடங்கும் போது முதல் ஜோடிக்கும் இப்படித்தான் கமெண்ட் போட்டார்கள். அப்புறம் அதே ரசிகர்கள் கொண்டாடலையா என்று ஆளாளுக்கு சமாதானம் சொல்லிக்கொண்டாலும் ஹீரோயின் மட்டும் ஹீரோ ‘விலகி’ப் போன அதிர்ச்சியிலிருந்து மீள வில்லையாம்! அது அப்பட்டமாக ஷூட்டிங் ஸ்பாட்டிலும் சீரியல் காட்சியிலும் தெரிவதாக படப்பிடிப்பில் இருக்கும் ஆட்களே பேசிக்கொள்கிறார்களாம். பிரிவு சீரியலோடன்னா போகட்டும்னு விட்டுத்தள்ளிடலாம்… அதுவே நிரந்தரப் பிரிவா போச்சுன்னா என்னாகிறது என்பதுதான் ஹீரோயின் கவலையாம்.! சீரியல்னாலே ஏகப்பட்ட சிக்கலும் முடிச்சும் இருக்கத்தானே செய்யும். இருந்தாலும் கடைசியில் சுமூகமாகத்தானே முடிப்பார்கள். இந்தக் ‘கதை’யும் அப்படியே முடியும் என்று நம்புவோம்!

Latest Posts

தள்ளிப்போகிறதா ‘பாபநாசம் 2’ ?.. கமலின் திட்டம் இதுதான் !

'பாபநாசம் 2' எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குடும்ப பின்னணியை கொண்டு எடுக்கப்பட்டு பிரம்மாண்ட வெற்றிப்பெற்ற...

கொரோனாவுக்கு மத்தியில் ஹைதராபாத் சென்று படப்பிடிப்பைத் துவங்கிய விஷால்!

நடிகர் விஷால் தான் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பைத் மீண்டும் துவங்குவதற்காக ஹைதராபாத் சென்றுள்ளதை வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். விஷால் கடைசியாக ஆனந்த்...

சாந்தனு- அதுல்யாவின் கலக்கல் கெமிஸ்ட்ரி… டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு முழு வீடியோ வெளியானது!

'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தில் இடம் பெற்றுள்ள டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு பாடலின் முழு வீடியோ வெளியாகியுள்ளது. தரண் குமார் இசையில் சிவாங்கி மற்றும்...

திருமணத்திற்காக சொந்த ஊர் சென்ற சாய் பல்லவி… வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை சாய் பல்லவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 'பிரேமம்' படத்தில் மலர் டீச்சராக வந்து ரசிகர்கள் மனதில் நீங்கா படம் பிடித்தவர்...
பாதியில் ஓடிப்போன ஹீரோ… நொறுங்கிப்போன ஹீரோயின்.!?பாதியில் ஓடிப்போன ஹீரோ… நொறுங்கிப்போன ஹீரோயின்.!?

Actress

-Advertisement-
TTN Cinema