உச்ச நட்சத்திரங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கிற படம் ட்ராப்.! லேட்டஸ்ட் அப்டேட்.!?

உச்ச நட்சத்திரங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கிற படம் ட்ராப்.! லேட்டஸ்ட் அப்டேட்.!?

கொரோனா தாக்குதலால் உலகமே பெரிய அளவில் பாதிப்பை சந்திச்சிருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.! இந்த நேரத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய படம் ஒண்ணு டேக்- ஆஃப் ஆகுமா இல்லையா என்பது குறித்து சமூக இடைவெளிவிட்டு ஆங்காங்கே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் ஒன்றாக நடித்து உச்சம் தொட்ட நடிகர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கப் போவதாகவும், கலை தாகத்தோடு இருக்கும் நடிகர் தயாரிப்பதாகவும்… ஒரு ராத்திரியில் நடக்கிற கதையால் உச்சம் தொட்ட இளம் இயக்குனர் இயக்கப் போகிறார் என்றும் கோடம்பாக்கம் ஏரியாவில் சொல்லப்பட்டது.
உச்ச நட்சத்திரங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கிற படம் ட்ராப்.! லேட்டஸ்ட் அப்டேட்.!?
ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்க வாய்ப்பே இல்லை என்று கூடவே சிலர் ப்ரேக்கிங் நியூஸைத் தட்டிவிட்டார்கள்.சில மேல்மட்ட தொடர்பில் உள்ள ஆட்கள் மூலம் கிடைத்த தகவல்.ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்றது உண்மைதான் என்று ஒட்டு மொத்த இண்டஸ்ட்ரியும் அந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பில் இருந்தார்கள்.
சினிமாவில் ஒரு படம் தியேட்டருக்கு வர்ற வரை அல்லது OTT க்கு வர்றவரை உறுதி சொல்ல முடியாது என்று ஒரு ‘கருத்து’ சினிமாவில் உண்டு.அது போல் தான் ஆகிவிட்டது.அந்த ப்ராஜெக்ட் கெடையாது… டிராப் ஆகிடுச்சு என்றொரு செய்தி… Tik Tok தடை பண்ணியதைவிட ‘ஹாட்டா’ போய்கிட்டிருக்கு!
உச்ச நட்சத்திரங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கிற படம் ட்ராப்.! லேட்டஸ்ட் அப்டேட்.!?
அப்படியா என்று ஒரு ‘அண்ணாத்தே’ கிட்ட வாட்ஸ் ஆப் காலில் கேட்டதுக்கு, ‘உச்ச நடிகரின் படம் 2021 பொங்கலுக்கு வர வேண்டிய படம்… அதோட பேலன்ஸ் ஷூட்டிங்கே ஜனவரிக்கு அப்பறம்தான் போகும் போல… இதுல இந்தப் ப்ராஜெக்ட் எப்படி நடக்கும்.!?’ என்று லாஜிக் தட்டினார்.’நீங்க போன் பண்ணலைன்னா நானே ஃபேஸ் புக்ல ஸ்டேட்டஸ் தட்டிவிடலாம்னுதான் இருந்தேன்’என்று கூடுதல் தகவலையும் சொன்னார்.’கண்டெண்ட்’ பஞ்சம் கொஞ்சம் ஓவராத்தான் இருக்கும் போல.!?
அப்பறம் ஆழ்வார்பேட்டை ஏரியாவில் இருக்கிற இன்னொரு சோர்ஸ்க்கு வாட்ஸ் ஆப் கால் போட்டேன்.’என்ன ரெகுலர் கால்ல வராம இதுல வர்றீங்க?!’ என்றார் எடுத்த எடுப்புலயே.! தொழில் ரகசியம் நேர்ல பார்க்கிறப்போ சொல்றேன் என்று சொல்லிவிட்டு விசயத்தைச் சொன்னேன்.
‘நேத்து கூட நம்ம ஆளை இயக்குனர் சந்திச்சுப் பேசினாரே.! கண்டிப்பா படம் உண்டு.இதுல கூடுதல் தகவல் என்னன்னா… நம்மவர் படம் முழுக்க வரமாட்டார். ஆனால்,ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.அதைப் பேசத்தான் ரெண்டு பேரும் சந்திச்சாங்க.’ என்று அழுத்தமாகச் சொன்னார்.
ஸோ., லாக்டவுன் முடியரத்துக்காக வெயிட்டிங்…

Share this story