தனுஷ்-ராம்குமார் கூட்டணியில் உருவாகும் ஃபேண்டஸி திரைப்படத்தின் டைட்டில் இது தான்!

தனுஷ்-ராம்குமார் கூட்டணியில் உருவாகும் ஃபேண்டஸி திரைப்படத்தின் டைட்டில் இது தான்!

தனுஷ், இயக்குனர் ராம்குமாருடன் கூட்டணி அமைக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

நடிகர் தனுஷ் தொடர்ச்சியாக வெற்றிப் படங்கள் கொடுத்து வருகிறார். அவரது சமீபத்திய படங்கள் இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் தனுஷ் தனது அடுத்த படங்களில் திறம் வாய்ந்த இளம் இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து வருகிறார்.

தனுஷ்-ராம்குமார் கூட்டணியில் உருவாகும் ஃபேண்டஸி திரைப்படத்தின் டைட்டில் இது தான்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ‘கர்ணன்’ படமும் முடியும் தருவாயில் இருக்கிறது.

இந்நிலையில், இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். ‘ராட்சசன்’ என்ற உலகத்தார் க்ரைம் திரில்லரை எடுத்த ராம்குமாருடன் தனுஷ் கூட்டணி அமைக்கப் போகிறார் என்றதுமே கோலிவுட்டில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவ ஆரம்பித்துவிட்டது.

தனுஷ்-ராம்குமார் கூட்டணியில் உருவாகும் ஃபேண்டஸி திரைப்படத்தின் டைட்டில் இது தான்!

தற்போதைய அப்டேட்டின் படி, இப்படம் விண்வெளியில் நடக்கும் சயின்ஸ் பிக்ஷன் கதையாக எடுக்கப்பட இருக்கிறதாம். மேலும் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படம் இந்தியா முழுவதும் வெளியாக இருக்கிறது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

தற்போது இந்தப் படத்தின் டைட்டில் அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘வால் நட்சத்திரம்‘ என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் இறுதி நடிகர்கள், குழுவினர் மற்றும் டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ்-ராம்குமார் கூட்டணியில் உருவாகும் ஃபேண்டஸி திரைப்படத்தின் டைட்டில் இது தான்!


தனுஷ் தற்போது ஆனந்த் எல் ராயுடன் இந்தி திரைப்படமான ‘அட்ரங்கி ரே’ படப்பிடிப்பில் கலந்து வருகிறார் . டிசம்பர் மாதத்திற்குள் அந்தப் படத்தை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையடுத்து கார்த்திக் நரேனுடன் தனது படத்திற்கான பணிகளைத் தொடங்கவுள்ளார்.

Share this story