திருமகள் சீரியல் நடிகைக்கு திருமணம்… ரசிகர்கள் வாழ்த்து!…

திருமகள் சீரியல் நடிகைக்கு திருமணம்…  ரசிகர்கள் வாழ்த்து!…

திருமகள் சீரியலில் நடித்து வந்த பிரபல நடிகைக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு கொரானா பரவல் காரணமாக சீரியல்களில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. முன்னரே எடுக்கப்பட்ட சிறிது காலம் ஒளிபரப்பப்பட்டு வந்தன. பின்னர் ஊடரங்கு காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாததால் அனைத்து சீரியல்களும் நிறுத்தப்பட்டன. சில சீரியல்கள் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டன. சினிமா போன்று சீரியல்களின் இயக்குனர்கள் என்ன செய்வது தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர்.

திருமகள் சீரியல் நடிகைக்கு திருமணம்…  ரசிகர்கள் வாழ்த்து!…

இதையடுத்து கொரானா தொற்று குறைந்ததால் படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சீரியல்களை அசுர வேகத்தில் எபிசோடுகளை இயக்க தொடங்கினர். ஆனால் அது எளிதாக காரியமாக இருக்கவில்லை. ஏனெனில் நிறைய நடிகர், நடிகைகள் வெளிமாநிலங்களில் இருந்ததால் பழையபடி சீரியலை கொண்டு வரமுடியவில்லை. அதனால் கதைகளில் மாற்றம் செய்தனர், அதேசமயம் நிறைய பேர் மாற்றப்பட்டனர்.

திருமகள் சீரியல் நடிகைக்கு திருமணம்…  ரசிகர்கள் வாழ்த்து!…

அந்த வரிசையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்தான் ‘திருமகள்’. தினமும் இரவு 10.30மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் ஹரிகா, சுரேந்தர் சண்முகம், ஷமிதா ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்து வந்தனர். இதோடு இந்த சீரியலில் கொரானா முன்புவரை பிரகதி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வந்தவர் சுஷ்மிதா நாயர். அவர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் ஷூட்டிங் வரமுடியாத காரணத்தால் சீரியலிருந்து விலகினார்.

திருமகள் சீரியல் நடிகைக்கு திருமணம்…  ரசிகர்கள் வாழ்த்து!…

இந்நிலையில் நடிகை சுஷ்மிதாவுக்கு, டி ஜான் என்பவருடன் கடந்த 18-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு உறவினர்களும், நண்பர்களும் நேரில் சென்று வாழ்த்தினார். இந்த விஷயத்தை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வண்ணம் தற்போது தனது திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் சுஷ்மிதா. அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this story