பவானி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் நடிக்க இருந்தது இவரா!?

பவானி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் நடிக்க இருந்தது இவரா!?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. விஜய் சேதுபதி மிரட்டல் வில்லனாக இப்படத்தில் அசத்தியிருந்தார். பவானி என்ற கதாபாத்திரம் படம் முடிந்து வெளியே வந்தாலும் ‘மண்டைக்குள்ளே ஓடிட்டே இருக்கு’ என்ற வகையில் சிறப்பான கதாபாத்திரம் விஜய் சேதுபதிக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் சேதுபதியின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்துவிட்டதாகவும் பேசப்பட்டு வருகிறது. பல பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறதாம்.

பவானி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் நடிக்க இருந்தது இவரா!?

மாஸ்டர் படத்தில் வில்லனாக வேறொரு நடிகரை முதலில் முடிவு செய்திருந்தார்களாம். ஆம், தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் தான் முதலில் பவானி கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போகவே விஜய் சேதுபதி இப்படத்தில் இணைந்துள்ளார்.

பவானி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் நடிக்க இருந்தது இவரா!?

மாஸ்டர் படத்தின் வெற்றியில் விஜய் சேதுபதிக்கு முக்கியப் பங்குண்டு. முன்னணி ஹீரோவாக வளர்ந்துவிட்ட இந்த சமயத்தில் இப்படிப்பட்ட ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தால் மார்க்கெட் குரைந்துவிடுமோ என்று சிறிதும் தயங்காமல் நடிப்பை மட்டும் முன்னிறுத்தி இப்படத்தில் அசால்ட்டாக நடித்தார். அதற்கான உரிய பலனும் கிடைத்துவிட்டது.

இனி வரும் படங்களில் விஜய் சேதுபதியை இன்னும் மிரட்டல் வில்லனாகப் பார்க்கலாம் போல!

Share this story