Thursday, May 13, 2021

Movie Stills

சத்தாராக நடித்ததற்கு இதுதான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது… காளிதாஸ் ஜெயராமுக்கு வந்த கலங்க வைக்கும் கடிதம்!

கடந்த வருடன் டிசம்பர் மாதம் நெட்பிளிக்ஸில் பாவக்கதைகள் அந்தாலஜி படம் வெளியானது. வெற்றிமாறன், சுதா கொங்கரா, கவுதம் மேனன், விக்னேஷ் சிவன் ஆகிய நான்கு இயக்குனர்கள் நான்கு வெவ்வேறு பகுதிகளை இயக்கியிருந்தனர்.

அதில் அனைத்து பகுதிகளும் நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக சுதா கொங்கரா இயக்கத்தில் சாந்தனு, காளிதாஸ் ஜெய்ராம், பவானி ஸ்ரீ நடிப்பில் வெளியான தங்கம் பகுதி அனைவரிடத்திலும் பாராட்டைப் பெற்றது. காளிதாஸ் ஜெயராமுக்கு இந்த ஒரு படமே திருப்புமுனையாக அமையும் அளவிற்கு தன்னுடைய முழு நடிப்பையும் வெளிப்படுத்தியிருந்தார். மூன்றாம் பாலின மக்கள் நம் சமூகத்தில் நடத்தப்படும் அவலங்களை முகத்தில் அறைந்தாற் போல் எடுத்துக்கூறியது தங்கம்.

சத்தாராக நடித்ததற்கு இதுதான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது... காளிதாஸ் ஜெயராமுக்கு வந்த கலங்க வைக்கும் கடிதம்!

தற்போது தங்கம் பகுதியைப் பார்த்த மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் காளிதாஸ் ஜெயராமுக்கு மிகவும் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். காளிதாஸ் அந்தக் கடிதத்தை தனக்குக் கிடைத்த மிகப்பெரிய விருது என்று பகிர்ந்துள்ளார்.

அந்தக் கடிதம் பின்வருமாறு:

“என் பெயர் ஜான். நான் ஒரு மூன்றாம் பாலினத்தவன்(உடல்ரீதியாக பெண், ஆணாக பார்க்கப்படுபவன்). என்னுடைய உச்சரிப்புகள் ஆண் போன்று தான் இருக்கும். நான் நெட்ஃபிளிக்ஸில் தங்கம் பார்த்தேன். அந்தக் கதாபாத்திரத்தில் ஒரு மூன்றாம் பாலினத்தவர் நடிக்கவில்லை என்று எனக்கு அதிருப்தி இருந்ததால் நான் பல நாட்களாக தங்கம் பகுதியைப் பார்க்காமல் இருந்தேன். பின்னர் நான் இன்று அந்தப் படத்தைப் பார்க்க விரும்பினேன் ஏனெனில் சக்கி இன்று எங்கள் குழந்தைகளைக் காண வருகிறார். நான் அவரிடம் இந்தக் குறும்படம் எவ்வளவு அருமையானது என்று கூறவேண்டும். தற்போது இந்தப் படத்தைப் பார்த்ததற்கு மிகவும் சந்தோஷப்படுகிறேன். படத்தின் கடைசி 15 நிமிடங்களைப் பார்க்கும் போது நான் நொறுங்கிப் போனேன். நீங்கள் சத்தாராகவே வாழ்ந்துள்ளீர்கள் சகோதரரே. இந்தக் கதாபாத்திரத்தில் நடித்த உங்களை ஒரு நடிகராகக் கூட என்னால் பார்க்கமுடியவில்லை. நீங்கள் ஒரு மூன்றாம் பாலின கதாபாத்திரத்திற்கான அனைத்து சாராம்சங்களையும் எடுத்துக்கொண்டு உங்களால் முடிந்த அனைத்தையும் கொடுத்துள்ளீர்கள். இதைச் செய்ததற்கு மிக்க நன்றி.

பகுதியளவு மறைந்து வாழும் ஒரு மனிதராகவும், அனைத்து சிறுபான்மையினருக்கும் குறிப்பாக LGBTQ சமூகம் மற்றும் ஊனமுற்றோருக்கு சம உரிமைகளை விரும்பும் ஒரு மனிதனாகவும் இந்தப் படம் உருவானதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

நாம் தினமும் பார்க்கும் மூன்றாம் பாலின மக்களுக்கு அவர்கள் இடத்தில் நம்மை யோசித்துப் பார்க்க ஒரு நினைவூட்டலாக அமைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்குத் தெரியுமா நீங்கள் “யாராவது என்னைத் தொடும் போதெல்லாம், ஒன்று அவர்கள் என்னை அசிங்கமாக பார்ப்பார்கள் இல்லை என்னை தவறாக கண்ணோட்டத்தில் அணுகுவார்கள்” என்ற டயலாக்கை சொல்லுவதைப் பார்த்த பின்னர், முதன்முதலாக என்னுடைய உண்மையான அன்பு மற்றும் பாசம் பெற்ற ஒரு நபராக மாறிவிட்டிர்கள். அது நேரடியாக என் இதயத்தில் இடம் பிடித்துவிட்டது.

உண்மையிலே மிகவும் எதார்த்தமாக, உண்மையாக இருந்தது. உண்மையிலே நீங்கள் நடித்த கதாபாத்திரத்தின் அழுத்தம் தெரியாமல் உங்களால் இத்தகைய நடிப்பை வெளிப்படுத்தியிருக்க முடியாது. ஒடுக்கப்பட்ட குரலுடைய மக்களின் குரலாய் நீங்கள் இருந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் என் போன்ற சமூகத்திற்கு தொடர்ந்த ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் காளி சகோதரரே!” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

உயிருக்கு போராடுவதாக வதந்தி.. டென்ஷனான பிரபல சீரியல் நடிகை தக்க பதிலடி!

உயிருக்கு போராடுவதாக வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து நடிகை கேப்ரியெல்லா தக்க பதிலடி கொடுத்துள்ளார். டிக்டாக் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியெல்லா. ரசிகர்களிடையே நல்ல...

“கொரோனா ரொம்ப டேஞ்சரஸ் ஃப்ளோ” – நடிகர் சென்றாயன் கதறல்

கொரானாவிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி நடிகர் சென்றாயன் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சென்றாயன். ‘மூடர் கூடம்’...
சத்தாராக நடித்ததற்கு இதுதான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது... காளிதாஸ் ஜெயராமுக்கு வந்த கலங்க வைக்கும் கடிதம்!சத்தாராக நடித்ததற்கு இதுதான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது... காளிதாஸ் ஜெயராமுக்கு வந்த கலங்க வைக்கும் கடிதம்!

Actress

-Advertisement-
TTN Cinema