விஜய் சேதுபதி படத்திலிருந்து பாதியில் விலகிய ஸ்ருதி ஹாசன்… இதுதான் காரணமாம்!

விஜய் சேதுபதி படத்திலிருந்து பாதியில் விலகிய ஸ்ருதி ஹாசன்… இதுதான் காரணமாம்!

பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைக் கடைபிடிக்காததாக நடிகை ஸ்ருதி ஹாசன் லாபம் படத்திலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈ, பேராண்மை படங்களை இயக்கிய எஸ்பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ‘லாபம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். விவசாயிகள் பிரச்சனை குறித்து படம் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது படத்தின் வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது.

Image

இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடித்து வருகிறார். ‘லாபம்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் படப்பிடிப்பில் கலந்து வந்துள்ளனர். அப்போது ஷூட்டிங்கைப் பார்க்க ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர்.

இதனால், பாதுகாப்பு நடவடிக்கைகள் படப்பிடிப்பில் பின்பற்றப்படவில்லை என்று கூறி நடிகை ஸ்ருதி ஹாசன் அப்படத்திலிருந்து விளக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விஜய் சேதுபதி படத்திலிருந்து பாதியில் விலகிய ஸ்ருதி ஹாசன்… இதுதான் காரணமாம்!

இது குறித்து ஸ்ருதி ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில் “கொரோனா தொற்று அனைவரது உடல்நலத்திற்கும் பேராபத்து. தொற்றுநோய் முடிந்துவிடவில்லை! நெறிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால் எனது பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க ஒரு நபராகவும் ஒரு நடிகராகவும் எனக்கு உரிமை உண்டு! சும்மா சொன்னேன்” என்று கூறியிருப்பது அவர் வெளியேறியதை உறுதிப் படுத்துவதாக அமைந்துள்ளது.

Share this story