பாபநாசம் படத்தை இயக்காதது ஏன்?: நடிகை ஸ்ரீப்ரியா பதில்..

பாபநாசம் படத்தை இயக்காதது ஏன்?: நடிகை ஸ்ரீப்ரியா பதில்..

2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்- மீனா நடிப்பில் வெளியான படம் த்ரிஷ்யம். மலையாளத்தில் பிரமாண்ட வெற்றி பெற்ற இந்தப் படம் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.  அந்தந்த மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி சீன மொழியிலும் ரிமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் என்ற பெருமையையும் பெற்றது.
பாபநாசம் படத்தை இயக்காதது ஏன்?: நடிகை ஸ்ரீப்ரியா பதில்..
இந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசன் – கௌதமி நடித்திருந்தனர்.  2015-ல் வெளியான இந்தப்படத்தையும் ஜீத்து ஜோசப்பே இயக்கியிருந்தார். எதிர்பாராத விதமாக பிரச்னையில் சிக்கிகொல்லும் மகளையும், குடும்பத்தையும் காப்பாற்றப் போராடும் குடும்பத் தலைவனின் வாழ்க்கைதான் கதைக்களம்.
பாபநாசம் படத்தை இயக்காதது ஏன்?: நடிகை ஸ்ரீப்ரியா பதில்..
இந்தப்படத்தை முதலில் நடிகை ஸ்ரீதேவி இயக்க இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் ஜீத்து ஜோசப் கோரிக்கை வைத்ததால் கமல் நடித்த பாபநாசம் படத்தை இயக்க முடியாமல் போனதாக நடிகை ஸ்ரீப்ரியா கூறியுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாபநாசம் படத்தை இயக்காதது ஏன்?: நடிகை ஸ்ரீப்ரியா பதில்..
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: “படக்குழுவினரிடன் நட்பு இருந்ததால் த்ரிஷ்யம் படத்தைப் பார்க்காமலேயே அனைத்து மொழிகளுக்கான உரிமையையும், அவரது  கணவர் ராஜ்குமார் சேதுபதி வாங்கியதாகவும், தமிழில் ரஜினியை வைத்தே முதலில் அந்தப்படத்தை இயக்க இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பாபநாசம் படத்தை இயக்காதது ஏன்?: நடிகை ஸ்ரீப்ரியா பதில்..
ஆனால் கமல் இந்தக் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என அனைவரும் சொன்னதாகவும், கமலும் யோசிக்காமல் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். மேலும் இயக்குநர் ஜீத்து ஜோசப் தன்னிடம் கோரிக்கை வைத்ததால், தமிழில் அந்தப்படத்தை இயக்க முடியாமல் போனதாகவும், மாறாக தெலுங்கில் வெங்கடேஷை வைத்தும் இயக்கியதாகவும் தெரிவித்தார்..
 
Share this story