படக்குழுவினரை திட்டித்தீர்த்த டாம் குரூஸ்.. வைரலாகும் ஆடியோ…

படக்குழுவினரை திட்டித்தீர்த்த டாம் குரூஸ்.. வைரலாகும் ஆடியோ…

கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில மாதங்களாக உலகையே முடக்கிப்போட்டுள்ளது. தற்போது தான் வைரஸின் பாதிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து துறை சார்ந்த பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளோடு உலகம் முழுவதும் சினிமா படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. படக்குழுவினரை திட்டித்தீர்த்த டாம் குரூஸ்.. வைரலாகும் ஆடியோ…

இதனையடுத்து ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் தற்போது மிஷன் இம்பாஸிபில் 7 படத்தில் நடித்து வருகிறார். லண்டனில் இதற்கென தனி கிராமத்தையே உருவாக்கி படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். 


இந்த நிலையில் படப்பிடிப்பில் பங்கேற்ற சிலர் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக கூடி நின்றனர். அதை பார்த்து கடுப்பான டாம் குரூஸ் அவர்களை கடுமையாக திட்டித் தீர்த்துவிட்டார். அந்த ஆடியோ தற்போது கசிந்து வைரலாகி வருகிறது. சுமார் 2 நிமிடங்கள் உள்ள அந்த ஆடியோவில் டாம் குரூஸ் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார். படக்குழுவினரை திட்டித்தீர்த்த டாம் குரூஸ்.. வைரலாகும் ஆடியோ…

அதில், “கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் படப்பிடிப்பில் இருந்து விரட்டப்படுவார்கள். சினிமா துறை முடங்கியதால் வேலை இழந்து இருப்பவர்களிடம் பேசி பாருங்கள். அப்போது கஷ்டம் புரியும். சாப்பாடு இல்லாமல் கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். 


தினமும் தூங்க போகும்போது அதை நினைத்து பார்க்கிறேன். உங்கள் அஜாக்கிரதையால் படப்பிடிப்பை நிறுத்த முடியாது. படப்பிடிப்பு தளத்தில் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்” என்று பேசி உள்ளார். கொரோனா விதிமுறையை கடைப்பிடிக்காத 5 பேர் படப்பிடிப்பில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

Share this story