‘லாபம்’ படத்தால் ஓடிடி-யில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’!?

‘லாபம்’ படத்தால் ஓடிடி-யில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’!?

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘துக்ளக் தர்பார்’ படத்தை ஓடிடி-யில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் டெல்லி தீனதயாளன் இயக்கத்தில் ‘துக்ளக் தர்பார்‘ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். லலித் குமார் தயாரித்துள்ளார்.

‘லாபம்’ படத்தால் ஓடிடி-யில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’!?

இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளியாவதாக இருந்தது. ஆனால் மறைந்த இயக்குனர் ஜனநாதன் இயக்கிய லாபம் திரைப்படமும் அதே நேரத்தில் வெளியாவதாக இருந்ததால், விஜய் சேதுபதி துக்ளக் தர்பார் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரிடம் பேசி லாபம் படம் ஏப்ரல் மாதம் வெளியாகட்டும், துக்ளக் தர்பார் படத்தை சில நாட்கள் கழித்து வெளியிடலாம் என்று கோரிக்கை வைத்தார்.

‘லாபம்’ படத்தால் ஓடிடி-யில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’!?

விஜய் சேதுபதியின் கோரிக்கையை ஏற்ற லலித்குமாரும் துக்ளக் தர்பார் பட ரிலீஸ் தேதியை மாற்றி அமைத்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் படக்குழுவினர் தற்போது படத்தை ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னணி ஓடிடி தளம் ஒன்றுடன் படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், பெரிய விலைக்கு படத்தை வாங்க அந்நிறுவனம் சம்மதிதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. பெரிய விலை என்பதால் தயாரிப்பாளர் ஓடிடி முடிவை எடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share this story