”நேரடியாக மோதி பார்ப்போம்” என வசனம் பேசும் விஜய் சேதுபதி… ‘துக்ளக் தர்பார்’ டீசர் வெளியீடு…

”நேரடியாக மோதி பார்ப்போம்” என வசனம் பேசும் விஜய் சேதுபதி… ‘துக்ளக் தர்பார்’ டீசர் வெளியீடு…

விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பாரின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

”நேரடியாக மோதி பார்ப்போம்” என வசனம் பேசும் விஜய் சேதுபதி… ‘துக்ளக் தர்பார்’ டீசர் வெளியீடு…

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் பார்த்திபன் கூட்டணியில் கலக்க வரவிருக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’. லலித் குமார் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கி வருகிறார். இதில் அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 

”நேரடியாக மோதி பார்ப்போம்” என வசனம் பேசும் விஜய் சேதுபதி… ‘துக்ளக் தர்பார்’ டீசர் வெளியீடு…

‘துக்ளக் தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்தவிட்டதாக கூறப்படும் நிலையில், முழுக்க முழுக்க அரசியல் பின்னணியைக் கொண்ட படமாக இருக்கும் என தெரிகிறது. ‘வாங்களேன் நேரடியாக மோதி பார்ப்போம்’ என விஜய் சேதுபதி பேசும் வசனங்கள் டீசரில் பட்டையை கலக்குகிறது. ‘நானும் ரவுடிதான்’ படத்திற்கு பிறகு இணைந்துள்ள விஜய் சேதுபதி, பார்த்திபன் இக்கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏற்கனவே வெளியிட்டுள்ள படக்குழு, இன்று மதியம் டீசரை வெளியிடுவதாக அறிவித்திருந்தது. அதன் இன்று டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரை விஜய் சேதுபதி தனது சமூக வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Share this story