உதயநிதி- மகிழ் திருமேனி கூட்டணியில் இணைந்த இரு முக்கிய நடிகர்கள்!

உதயநிதி- மகிழ் திருமேனி கூட்டணியில் இணைந்த இரு முக்கிய நடிகர்கள்!

உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கும் திரைப்படத்தில் பிக்பாஸ் ஆரவ் மற்றும் கலையரசன் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின் கடைசியாக மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘சைக்கோ’ படத்தில் நடித்திருந்தார். தற்போது தேர்தல் வேலைகளில் மும்மரமாக இறங்கியுள்ளார் உதயநிதி.

உதயநிதி- மகிழ் திருமேனி கூட்டணியில் இணைந்த இரு முக்கிய நடிகர்கள்!

‘தடம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மகிழ் திருமேனி, உதயநிதி நடிக்கும் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகை நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இப்படம் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் மற்றும் கலையரசன் இருவரும் இப்படத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. படக்குழு அடுத்த சில நாட்களுக்கு திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் படப்பிடிப்பு நடத்தவுள்ளது.


இந்தப் படத்தை அடுத்து இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி நடிக்கவுள்ளார் .அந்தப் படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கவிருக்கிறார்.

Share this story