"த்து… உப்பு கரிக்குது" பிரியாணி செய்து மனைவியிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட நடிகர் சூரி

"த்து… உப்பு கரிக்குது" பிரியாணி செய்து மனைவியிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட நடிகர் சூரி

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி திரை பிரபலங்களும் வீட்டில் சமைப்பது, ஓவியம் வரைவது என பிஸியாக உள்ளனர். 

"த்து… உப்பு கரிக்குது" பிரியாணி செய்து மனைவியிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட நடிகர் சூரி

இந்நிலையில் நடிகர் சூரி அவரது வீட்டில் பிரியாணி சமைத்து சொதப்பியுள்ள  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சூரி  இயல்பாகவே நன்றாக சமைப்பார். இருப்பினும் பிரியாணி செய்து அவர் மனைவியிடம் ருசி பார்க்க கொடுக்க, த்து… உப்பு கரிக்கிறது என்று  வாங்கிகட்டிக்கொள்ள தன் குழந்தைகளிடம் சூரி அய்யய்யோ குழந்தைகளா சொதப்பிருச்சு வாங்க ஓடிறலாம் என்று சமையல் அறையை விட்டு ஓடி விடுகிறார். 

அதுமட்டுமில்லாமல்  மஞ்சள் வேப்பிலை இரண்டையும் வீட்டில் கிருமி நாசினியாக பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

Share this story