" வவ்வால், பாம்பை சாப்பிட்ட பக்கி பசங்களை விளக்குமாத்தால் அடிக்கச் சொல்லுங்கள்" : பிரதமருக்கு நடிகர் சூரி வேண்டுகோள்!

" வவ்வால், பாம்பை சாப்பிட்ட பக்கி பசங்களை விளக்குமாத்தால் அடிக்கச் சொல்லுங்கள்"  : பிரதமருக்கு நடிகர் சூரி வேண்டுகோள்!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை  நடிகராக வலம்  வருபவர் நடிகர் சூரி. சூரியின் காமெடிகள் காலப்போக்கில் சலிப்பு தட்டினாலும் அவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தற்போது சூரி ஊரடங்கால் தனது குடும்பத்தினருடன் பொழுதை மகிழ்ச்சியாக கழித்து வருகிறார். சமீபத்தில் சூரி பிரியாணி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். 

soori

இந்நிலையில் நடிகர் சூரி தனது குழந்தையை  குளிக்க வைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் ஒன்றையும் வைத்துள்ளார். அதில், “வெளியில் போனால் கொரோனா கொன்றுவிடும் என்கிறீர்கள். வீட்டுக்குள் இருந்தால் இந்த பக்கி பசங்க நம்மை கொன்று விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.

நாங்கள் உங்களுக்கு ஒத்துழைப்புஅளிக்கிறோம் . சீக்கிரம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து அதை  விளக்குமாத்தால் அடித்து அதை விரட்டிவிடுங்கள். அப்படியே சீன பிரதமருக்கு ஒரு போன் போட்டு இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமாக இருந்த அந்த வவ்வால், பாம்பை சாப்பிட்ட பக்கி பசங்களை விளக்குமாத்தால் அடிக்கச் சொல்லுங்கள். அப்போதான் புத்தி வரும்” என்று  கூறியுள்ளார். 

[video:https://www.instagram.com/tv/B-b3BOYBNvk/?utm_source=ig_web_copy_link]

இதை தொடர்ந்து கழிவறையை சுத்தம் செய்யும் சூரி,  நம்ம பசங்க போன கழிப்பறையை சுத்தம் செய்யும் போதே மூச்சு முட்டுகிறதே. பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்வது எவ்வளவு பெரியகாரியம். அவர்கள் தான் உடலாலும், மனதாலும் தூய்மையானவர்கள். அவர்கள் நன்றாக இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். 

 

Share this story