வீட்டில் முடங்கி பனியாரம் சுடுவேன் என நினைத்துக்கூட பார்த்ததில்லை – கலங்கும் நடிகர் சூரி

வீட்டில் முடங்கி பனியாரம் சுடுவேன் என நினைத்துக்கூட பார்த்ததில்லை – கலங்கும் நடிகர் சூரி

காமெடி நடிகர் சூரி ஊரடங்கு நேரத்திலும் அளித்த அண்மை பேட்டியில், “கொரோனா ஊரடங்கு உங்களை கட்டிப்போட்டு விட்டதாரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கிறது. இப்படியொரு காலகட்டம், ஓய்வு வந்திருக்க கூடாது. குடும்பத்தை பிரிந்து சினிமா சூட்டிங்கில் பிசியாக இருந்தேன். அப்போது குடும்பத்தினருடன் இருக்க முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தது. தற்போது குடும்பத்தினருடன் இருக்க நேரம் கிடைத்திருக்கிறது. ஆனால் கொரோனா மூலம் இப்படியொரு வாய்ப்பு அமைந்தது தான் வேதனையளிக்கிறது. உலகமே இதை மூன்றாவது உலகப்போர் போல எதிர்கொண்டுள்ளது. அதிலிருந்து நமக்கு மட்டும் விதிவிலக்கு கோரமுடியாது. அதனால் குடும்பத்துடன், குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதை கொண்டாடி வருகிறேன்.

வீட்டில் முடங்கி பனியாரம் சுடுவேன் என நினைத்துக்கூட பார்த்ததில்லை – கலங்கும் நடிகர் சூரி

திரையில் என்னை எல்லோரும் நடிகனாக, காமெடியனாக பார்த்திருப்பார்கள். வீட்டில் உள்ள சூரி இப்படித்தான் இருப்பான். அதனை மக்களுக்கு காட்ட விரும்பினேன் அதற்காகவே குழந்தைகளுடன் சேர்ந்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டேன். இதுபோன்ற நேரங்களில் வீட்டில் திருமண ஆல்பம் உள்ளிட்டவைகளை குழந்தைகளிடம் காட்டுங்கள் என கூறியிருந்தேன். உறவுகளை அவர்களுக்கு தெரியபடுத்துங்கள் என குறிப்பிட்டிருந்தேன். அதை பார்த்து இன்று பலரது வீடுகளில் பழைய ஆல்பங்களை எடுத்து குழந்தைகளுக்கு உறவுகளை தெரிவித்து வருவது சந்தோஷம் தருகிறது.

கொரோனாவில் இருந்து தப்பிக்க சமூக விலகலை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். வேறு வழி கிடையாது. அன்றாடம் வேலைக்கு போய் சம்பாதித்து வருபவர்கள் நிலைமை தான் கஷ்டம். இருந்தாலும் உயிரா, தொழிலா என பார்க்கும் போது உயிர் தான் முக்கியம். அதற்காக அரசு கூறியபடி வீட்டில் தனித்து இருந்து தான் ஆக வேண்டும்.

வீட்டில் முடங்கி பனியாரம் சுடுவேன் என நினைத்துக்கூட பார்த்ததில்லை – கலங்கும் நடிகர் சூரி

ஊரடங்கு தொடங்கிய மறுநாள் படுக்கைக்கு வந்து மனைவியும், குழந்தைகளும் காபி கொடுத்தனர். அடுத்தநாள் சற்று தள்ளி நின்றபடி காபி இருக்கிறது என்றனர். மூன்றாவது நாள் காபி அங்கு இருக்கிறது, எடுத்து குடித்து கொள்ளுங்கள் என்றனர். அதன் பின் காபி போட்டு குடியுங்கள் என கூறி விட்டனர்.தினமும் நமக்காக சமைக்கும் மனைவிக்கு நாமே சமைக்கலாம் என நானும், குழந்தைகளும் சேர்ந்து பிரியாணி தயாரித்தோம். அந்த பிரியாணி, வண்டி உள்வாங்கின கதையாகி விட்டது. இதனால் சமையல் செய்வதிலிருந்து ஒதுங்க நினைத்தேன். குழந்தைகள் விடவில்லை. பழைய சூரியாக மாற வேண்டும் என்றனர். அவர்களுக்காக பனியாரம் சுட்டு கொடுத்தேன். முதல் நாள் நான் சுட்ட பத்து பனியாரத்தை சுத்தியலை எடுத்து உடைத்து சாப்பிட வேண்டியதாகி விட்டது. அப்புறம் போகப்போக வண்டி ரோட்ட பார்த்து ஓடுற மாதிரி நல்லபடியாக பனியாரம் வர ஆரம்பிச்சுடுச்சி. அது சரிங்க, இந்த நேரத்தில் மனைவிக்கு ஒத்தாசையாக இருக்கணும் தானே.

வீட்டில் முடங்கி பனியாரம் சுடுவேன் என நினைத்துக்கூட பார்த்ததில்லை – கலங்கும் நடிகர் சூரி

வீட்டில் முடங்கிகிடப்பேன் என நினைத்து கூட பார்க்கவில்லை. சில ஆண்டுகளாக சூட்டிங், டப்பிங் என படுபிசியாக இருந்துட்டோம். சில நேரங்களில் ஒன்றிரண்டு நாட்கள் வேண்டுமானால் வீட்டில் இருந்திருப்போம். அப்போது கூட வெளியில் சென்று நண்பர்களை சந்தித்திருக்கிறேன். இதுபோல இத்தனை நாட்களாக வீட்டில் இருந்ததில்லை. மனைவியும், பிள்ளைகளையும் தவிர வேறு யாரையும் பார்க்காமல் இருந்தது இப்போது தான். கொரோனாவால் தினமும் பார்க்க வேண்டிய நண்பர்கள், சினிமா கேமரா மேன்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், சக நடிகர்கள், இயக்குனர்களை மிஸ் பண்ணுகிறேன்.

கொரோனா பரவலை தடுக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் மகிழ்ச்சியாக இருக்கிறது. போலீஸ்காரர்கள், டாக்டர்கள், நர்ஸ்கள் என எல்லோரும் முழுமையாக போராடி வருகின்றனர். மக்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு தருகின்றனர். சில கிராமங்களில் மக்கள் அஜாக்கிரதையாக இருக்கிறார்கள். கொரோனா வீரியத்தை உணர்ந்து மக்கள் அரசு விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

மதுரையின் அடையாளம் தான் சித்திரை திருவிழா. தமிழர்கள், தமிழ்நாட்டின் அடையாளம் இந்த திருவிழா. அது தடைபட்டது ஜீரணிக்க முடியாத விஷயம். பத்து நாட்கள் நடக்கும் இத்திருவிழா பலருக்கு பிழைப்பு தரும். அந்த வருவாயை வைத்து அவர்கள் பல மாதங்களை சமாளித்து விடுவர். திருவிழா ரத்தானது கவலையளிக்குது” எனக் கூறினார்.

 

 

Share this story