350 ஊழியர்களுக்கு விடுப்பு கொடுத்து முழு சம்பளத்தையும் கொடுத்த நடிகர் சூரி

350 ஊழியர்களுக்கு விடுப்பு கொடுத்து முழு சம்பளத்தையும் கொடுத்த  நடிகர் சூரி

தமிழ் சினிமாவில் நகைச்சுவை  நடிகராக வலம்  வருபவர் நடிகர் சூரி. சூரியின் காமெடிகள் காலப்போக்கில் சலிப்பு தட்டினாலும் அவரின் உணவகத்திற்கு இன்னும் மவுசு குறையவில்லை.  2017ம் ஆண்டு “அம்மன்” உயர்தர சைவ உணவகம் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை மதுரை காமராஜர் சாலையில் துவக்கினார்.

 

soori

 

இதற்கு அப்பகுதியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து உணவகத்தை விரிவுபடுத்த எண்ணிய சூரி , “அம்மன்” உயர்தர சைவ உணவகம் மற்றும் “அய்யன்” உயர்தர அசைவ உணவகம் ஆகிய இரண்டு புதிய கிளைகளை மதுரை அவனியாபுரம், ஏர்போர்ட் பைபாஸ் சாலையில் கடந்த ஆண்டு துவங்கினார். 

350 ஊழியர்களுக்கு விடுப்பு கொடுத்து முழு சம்பளத்தையும் கொடுத்த  நடிகர் சூரி
இந்நிலையில் ஊரடங்கு என்பதால் நடிகர் சூரி தனது ஓட்டல்களில் பணிபுரிந்து வரும்  350 ஊழியர்களுக்கு விடுப்பு கொடுத்ததுடன், அவர்களை அனுப்பும் போது எந்த பிடித்தமும் இல்லாமல் முழு சம்பளத்தையும் கொடுத்து வழியனுப்பியுள்ளார்.  இதை அறிந்த பலரும் இக்கட்டான சூழலில் உதவி செய்துள்ள சூரியை பாராட்டி வருகின்றனர். 

Share this story