‘உப்பேனா’ பட இயக்குனருக்கு பரிசு… இன்ப அதிர்ச்சி கொடுத்த பட தயாரிப்பு நிறுவனம்…

‘உப்பேனா’ பட இயக்குனருக்கு பரிசு… இன்ப அதிர்ச்சி கொடுத்த பட தயாரிப்பு நிறுவனம்…

‘உப்பென்னா’ படத்தை வெற்றிப்படமாக்கிய இயக்குனர் புச்சிபாபுக்கு தயாரிப்பு நிறுவனம் பென்ஸ் காரை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

‘உப்பேனா’ பட இயக்குனருக்கு பரிசு… இன்ப அதிர்ச்சி கொடுத்த பட தயாரிப்பு நிறுவனம்…

தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் ‘உப்பெனா’. இந்த படம் புச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகி வெளியானது. அறிமுக நடிகர்கள் வைஷ்ணவ் தேஜ்,கீர்த்தி ஷெட்டி ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர்.இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த கதாபாத்திரம் தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

‘உப்பேனா’ பட இயக்குனருக்கு பரிசு… இன்ப அதிர்ச்சி கொடுத்த பட தயாரிப்பு நிறுவனம்…

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பெரும் வெற்றியைப் பெற்று 100 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்தியா முழுவதும் பிரபலமான இப்படத்தை பல மொழிகளிலும் ரீமேக் செய்ய முயற்சித்து வருகின்றனர்.

‘உப்பேனா’ பட இயக்குனருக்கு பரிசு… இன்ப அதிர்ச்சி கொடுத்த பட தயாரிப்பு நிறுவனம்…

இதையடுத்து அறிமுக இயக்குனராக இப்படத்தை இயக்கிய புச்சிபாபுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.மேலும் பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் புச்சிபாபுக்கு படத்தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் ரூபாய் 75 லட்ச ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் காரை பரிசாக வழங்கியுள்ளது.இதனால் மகிழ்ச்சியடைந்த புச்சிபாபு, புதிய காரில் தன்னுடைய குருநாதர் இயக்குனர் சுகுமாரை உட்கார வைத்து ஓட்டியுள்ளார்.இந்த புகைப்படங்கள் ‌தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Share this story