வேற லெவல் காட்சியமைப்புகளுடன் கர்ணன் படத்தின் 4-ம் பாடல் வெளியானது!

வேற லெவல் காட்சியமைப்புகளுடன் கர்ணன் படத்தின் 4-ம் பாடல் வெளியானது!

கர்ணன் படத்தின் நான்காம் பாடலான உட்ராதீங்க எப்போவ் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

கர்ணன் படத்திலிருந்து இதுவரை வெளியாகியுள்ள அனைத்து பாடல்களும் மக்களிடத்தில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன. கண்டா வரச் சொல்லுங்க, மஞ்சணத்தி புராணம் என இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் அனைத்து பாடல்களும் ஆழமான கருத்துக்களையும், மக்களின் வாழ்வியலையும் எடுத்துக் கூறுபவையாக அமைந்திருந்தன.

வேற லெவல் காட்சியமைப்புகளுடன் கர்ணன் படத்தின் 4-ம் பாடல் வெளியானது!

அந்த வரிசையில் தற்போது உட்ராதீங்க எப்போவ் பாடல் வெளியாகியுள்ளது. தீ இந்தப் பாடலை பாடியுள்ளார். வழக்கம் போல இந்தப் பாடலிலும் சிறப்பான வித்தியாசமான காட்சியமைப்பைக் கொண்டுள்ளது. பாடலில் சந்தோஷ் நாராயணன், தீ, மாரி செல்வராஜ், சாண்டி உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.

இன்று கர்ணன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. தனுஷ் தவிர படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். கிரே மேன் படத்தின் படப்பிடிப்பிற்காக தனுஷ் அமெரிக்காவில் இருப்பதால் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் கர்ணன் தனக்கு மிகவும் ஸ்பெஷலான படம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 9-ம் தேதி கர்ணன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Share this story