இன்று மாலை ரெய்டு வரும் வாத்தி… விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி!

இன்று மாலை ரெய்டு வரும் வாத்தி… விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி!

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலிருந்து வாத்தி ரெய்டு பாடல் இன்று மாலை வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் வடிவமைப்பும், விஜயின் புதுமையான செய்கைகளும், அனிருத்தின் துள்ளலான இசையும் படத்திற்கு கூடுதல் பக்க பலமாக அமைந்தது. இந்தப் படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் அமோக வரவேற்பைப் பெற்றன.

இன்று மாலை ரெய்டு வரும் வாத்தி… விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி!

மாஸ்டர் படத்திலிருந்து இதுவரை குட்டி ஸ்டோரி, வாத்தி கமிங், அந்த கண்ண பாத்தாக்கா ஆகிய பாடல்கள் வெளியாகியுள்ளன. இந்த மூன்று பாடல்களும் பல லட்சம் பார்வைகளைப் பெற்று ஹிட் அதீத வருகின்றன. அந்த வரிசையில் வாத்தி ரெயிட் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விஜய் ரசிகர்கள் #Vaathiraid என்ற ஹாஷ்டாக்கை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Share this story