பாடகராக மீண்டும் என்ட்ரி கொடுத்த வடிவேலு… வைரலாகும் வீடியோ!

பாடகராக மீண்டும் என்ட்ரி கொடுத்த வடிவேலு… வைரலாகும் வீடியோ!

வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பிறகு பொதுவெளியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர் என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளியாகும் அனைத்து படங்களிலும் வடிவேலு இடம் பெற்றிருப்பார். பின்னர் அடுத்த தலைமுறை காமெடி நடிகர்களின் வரவும், திரைத்துறையினர் சிலருடன் ஏற்பட்ட கறுத்து மோதலும் அவரை சினிமாவிட்டு வெளியேறச் செய்தது. இதனால் கடந்த சில வருடங்களாக படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்து வருகிறார்.

பாடகராக மீண்டும் என்ட்ரி கொடுத்த வடிவேலு… வைரலாகும் வீடியோ!

இருப்பினும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களால் மீம் காட் என்று அன்போடு அழைக்கப்பட்டு வருவதுடன் மீம்ஸ் மூலமாக தினமும் மக்கள் முன் தோன்றி விடுகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் வடிவேலு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சியில் சிவாஜி நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ படத்தில் இடம் பெற்ற உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலையும் பாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story