தனுஷிற்கு வாழ்த்து கூறிய மீம் ஃகாட்… படிக்காதவன் படத்தில் நடித்த வடிவேலு… ருசிகர தகவல்கள்!

தனுஷிற்கு வாழ்த்து கூறிய மீம் ஃகாட்… படிக்காதவன் படத்தில் நடித்த வடிவேலு… ருசிகர தகவல்கள்!

நடிகர் தனுஷின் பிறந்தநாளுக்கு வைகைப்புயல் வடிவேலு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
ஒரு ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சினிமா காலங்காலமாக உருவாக்கி வைத்திருந்த ஒரு கட்டமைப்பை உடைத்தெறிந்தவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படம் மூலம் சினிமாவில் நுழைந்த தனுஷ் இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர், பாடகர் என தனது பன்முக திறமைகளை தானே செதுக்கிக் கொண்திருக்கிறார்.
தனுஷிற்கு வாழ்த்து கூறிய மீம் ஃகாட்… படிக்காதவன் படத்தில் நடித்த வடிவேலு… ருசிகர தகவல்கள்!
கடைசியாக அசுரன் படத்தில் தனது அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தற்போது இந்திய சினிமாவின் முக்கிய நடிகராக அனைவராலும் பார்க்கப்படுகிறார். தனுஷின் பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
தனுஷிற்கு வாழ்த்து கூறிய மீம் ஃகாட்… படிக்காதவன் படத்தில் நடித்த வடிவேலு… ருசிகர தகவல்கள்!
தற்போது நடிகர் வடிவேலு தனுஷிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
“தமிழ் சினிமாவின் மீது காதல் கொண்டு, புதுப்பேட்டையில் படிக்காதவனாய் வலம் வந்து வேலையில்லா பட்டதாரியாய் கொடி நாட்டி வட சென்னையில் நீ அசுரனாய் மாறிய போது நம் மக்களைப் போல் நானும் மகிழ்ந்தேன். இந்த ஜகத்தினில் நீ கர்ணனாய் தோன்ற வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


மேலும் வடிவேலு படிக்காதவன் பட ஷூட்டிங் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் விவேக்கின் கெட்டப்பில் வடிவேலு இருக்கிறார். இதிலிருந்து படிக்காதவன் படத்தின் முதலில் வடிவேலு தான் நடித்திருக்கிறார் என்று தெரிகிறது.

Share this story