சில நேரத்தில் செய்து கிடைக்கும் பெருமையை விட செய்யாமல் கிடைக்கும் பெருமையே பெரிது: விஜய் சேதுபதிக்கு வைரமுத்து அறிவுரை!

சில நேரத்தில் செய்து கிடைக்கும் பெருமையை விட செய்யாமல் கிடைக்கும் பெருமையே பெரிது: விஜய் சேதுபதிக்கு வைரமுத்து அறிவுரை!

நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் பலர் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் ‘800’ படத்தின் மோஷன் போஸ்டரில் இலங்கை போரின் நிகழ்வுகளும் இடம் பெற்றிருந்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சில நேரத்தில் செய்து கிடைக்கும் பெருமையை விட செய்யாமல் கிடைக்கும் பெருமையே பெரிது: விஜய் சேதுபதிக்கு வைரமுத்து அறிவுரை!

பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன், பாடலாசிரியர் தாமரை என ஏராளமானோர் விஜய் சேதுபதி அந்தப் படத்திலிருந்து விலகவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது கவிஞர் வைரமுத்து அப்படத்தைக் கைவிடுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“கலையாளர்
விஜய் சேதுபதிக்கு…

சில நேரங்களில்
செய்து எய்தும் புகழைவிடச்
செய்யாமல் எய்தும் புகழே
பெரிதினும் பெரிது செய்யும்.

நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள்.
வளர்பிறையில் கறை எதற்கு?

இன உரிமைக்காகக்
கலை உரிமையை
விட்டுக் கொடுப்பதே விவேகம்;
நீங்கள் விவேகி.” என்று தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி இந்த விவகாரத்தில் மவுனம் காத்து வருவது மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

Share this story