மொபைல் நம்பரால் சர்சை… வக்கீல் சாப் தயாரிப்பாளர் மீது போலீசில் புகார்…

மொபைல் நம்பரால் சர்சை… வக்கீல் சாப் தயாரிப்பாளர் மீது போலீசில் புகார்…

ஒரு மொபைல் நம்பரால் ‘வக்கீல் சாப்’ தயாரிப்பாளருக்கு பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் வித்தியாசமான நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்றுள்ள திரைப்படம் ‘வக்கீல் சாப்’. ஸ்ரீராம் வேணு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் பவன் கல்யாணுக்கு மிகப்பெரிய ஹிட்டை கொடுத்துள்ளது. கடந்த மாதம் வெளியான இப்படம் திரையரங்களில் மாபெரும் வெற்றிப்பெற்று ஓடியது. தற்போது கொரானா காரணமாக ஓடிடியில் வெளியாகி பட்டைய கிளப்பியுள்ளது.

மொபைல் நம்பரால் சர்சை… வக்கீல் சாப் தயாரிப்பாளர் மீது போலீசில் புகார்…

இதற்கிடையே இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் கதைப்படி ஒரு காட்சியில் வில்லன் வைத்திருக்கும் போனுக்கு அந்த படத்தில் நடித்துள்ள அஞ்சலியின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படும் ஒன்று அனுப்பி வைக்கப்படும். அப்போது ஒரு மொபைல் எண் ஒன்று திரையில் தெரியும். இந்த மொபைல் எண்ணால் பெரிய சர்ச்சையே வெடித்துள்ளது. தற்செயலாக படத்தில் ஏதோ ஒரு எண்ணை போட்டதால் பெரிய பிரச்சனை உருமாறியுள்ளது.

மொபைல் நம்பரால் சர்சை… வக்கீல் சாப் தயாரிப்பாளர் மீது போலீசில் புகார்…

இந்நிலையில் மொபைல் எண் பஞ்சகுட்டா பகுதியை சேர்ந்த சுதாகர் என்பது தெரிய வந்துள்ளது. சுதாகர் தற்போது வக்கீல் சாப் தயாரிப்பாளர் மீது போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், அந்த படத்தில் பயன்படுத்திய எண் தன்னுடையது என்றும், அந்த எண்ணை என் அனுமதி இல்லாமல் படத்தில் பயன்படுத்தியுள்ளதால், எனக்கு தொடர்ந்து அருவருக்கத்தக்க வகையில் அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. அதனால் தயாரிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் தயாரிப்பாளருக்கு பெரிய தலைவலியே ஏற்பட்டுள்ளது.

Share this story