ரசிகர்கள் எதிர்பார்த்தது நடக்கப்போகுது… அஜீத்தின் வலிமை அப்டேட்

ரசிகர்கள் எதிர்பார்த்தது நடக்கப்போகுது… அஜீத்தின் வலிமை அப்டேட்

ரசிகர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்த்தது நடக்கப்போகுது… அஜீத்தின் வலிமை அப்டேட்

‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத்- நடிகர் அஜித் கூட்டணி ‘வலிமை’ படத்தின் மூலம் இரண்டாவது முறையாக இணைந்தது. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் நடிகை ஹுமா குரேஷி ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்த்தது நடக்கப்போகுது… அஜீத்தின் வலிமை அப்டேட்

விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 15ம் தேதி முடிவடைந்தது. இறுதிகட்ட தயாரிப்பு பணியில் உள்ள இப்படம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்தது. ரசிகர்களும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு சமூக வலைத்தளங்களில் ரகளை செய்து வந்தனர்.

ரசிகர்கள் எதிர்பார்த்தது நடக்கப்போகுது… அஜீத்தின் வலிமை அப்டேட்

இதையடுத்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை விரைவில் வெளியிடுவதற்காக நாங்கள் பணியாற்றி வருவதால் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து நடிகர் அஜித்தும் அமைதியாக இருக்கும்படி அன்பு கட்டளையிட்டிருந்தார்.

ரசிகர்கள் எதிர்பார்த்தது நடக்கப்போகுது… அஜீத்தின் வலிமை அப்டேட்

இந்நிலையில் வலிமை படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் ‌வெளியாகவுள்ளது.அதோடு படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Share this story