வலிமை படத்தில் வேற லெவல் ஆக்ஷன் சீன்ஸ் இருக்கு… ஆர்கே சுரேஷ் வெளியிட்டுள்ள தகவல்!

வலிமை படத்தில் வேற லெவல் ஆக்ஷன் சீன்ஸ் இருக்கு… ஆர்கே சுரேஷ் வெளியிட்டுள்ள தகவல்!

‘வலிமை’ படத்தில் வெறித்தனமான ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக ஆர்கே சுரேஷ் தெரிவித்துள்ளார்.

அஜித் – எச்.வினோத் கூட்டணி இரண்டாவது முறையாக வலிமை படத்திற்காக இணைந்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். கோலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் முக்கியமான படமாக உள்ளது வலிமை.

வலிமை படத்தில் வேற லெவல் ஆக்ஷன் சீன்ஸ் இருக்கு… ஆர்கே சுரேஷ் வெளியிட்டுள்ள தகவல்!

‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று நெருக்கடி காலத்தில் எந்தவித கொண்டாட்டங்களும் வேண்டாம் என்று படக்குழுவினர் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைத்துள்ளனர்.

தற்போது தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் ஒரு உரையாடலில் ‘வலிமை’ படம் குறித்து பேசியுள்ளார். வலிமை படத்தில் பணியாற்றிய சிலர் அவருக்கு நெருக்கமானவர்கள் என்பதால் அவருக்கு இந்தக் தகவல் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலிமை படத்தில் வேற லெவல் ஆக்ஷன் சீன்ஸ் இருக்கு… ஆர்கே சுரேஷ் வெளியிட்டுள்ள தகவல்!


“அஜித் சார், ‘வலிமை’ படத்தில் சிறப்பான ஸ்டண்ட் காட்சிகளை செய்துள்ளார். இது அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கிய படமாக இருக்கும்” என்று ஆர்.கே.சுரேஷ் பகிர்ந்து கொண்டார். அஜித்தின் தீவிர ரசிகரான ஆர்கே சுரேஷ் படம் ‘வலிமை’ படம் வெளியாவதற்கு தீவிரமாகக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஆர்கே சுரேஷ் மலையாளத்தில் வெளியான ‘ஜோசப்’ படத்தின் தமிழ் ரீமேக் ஆன ‘விசித்திரன்’ படத்தில் நடித்து வருகிறார்.

Share this story