தொடர்ந்து சிக்கலில் ‘வலிமை’ படக்குழு… திட்டமிட்டபடி வெளியாகுமா ஃப்ர்ஸ்ட் லுக் ?

தொடர்ந்து சிக்கலில் ‘வலிமை’ படக்குழு… திட்டமிட்டபடி வெளியாகுமா ஃப்ர்ஸ்ட் லுக் ?

‘வலிமை’ படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கை நடத்துவதில் படக்குழுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

அஜீத்தின் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த அப்டேட்டை எப்போது வெளியிடுவார்கள் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அஜீத் மற்றும் படக்குழுவின் இந்த படத்தை விரைவில் வெளியிட தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். வில்லனாக கார்த்திகேயா மிரட்டியுள்ள இப்படத்தில் சுமித்ரா, ராஜ் அய்யப்பா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொடர்ந்து சிக்கலில் ‘வலிமை’ படக்குழு… திட்டமிட்டபடி வெளியாகுமா ஃப்ர்ஸ்ட் லுக் ?

இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இப்படத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மே 1ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புசெழியன் பெற்றுள்ளார்.

தொடர்ந்து சிக்கலில் ‘வலிமை’ படக்குழு… திட்டமிட்டபடி வெளியாகுமா ஃப்ர்ஸ்ட் லுக் ?

இதையடுத்து இறுதிக்கட்ட ஷூட்டிங்கை ஸ்பெயினில் நடத்த படக்குழு முடிவு செய்திருந்தனர்.ஆனால் கொரானா பரவல் அதிகரித்து வருவதால் ஸ்பெயினுக்கு சென்று ஷூட்டிங் நடத்த அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளை இந்தியாவிலேயே படமாக்க முடியுமா என படக்குழு யோசித்து வருகிறது. திட்டமிட்டபடி ஷூட்டிங் நடக்காததால் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகுமா என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

Share this story