‘வலிமை’ படத்தின் அப்டேட்டை வெளியிட்ட ஸ்டெண்ட் மாஸ்டர்…

‘வலிமை’ படத்தின் அப்டேட்டை வெளியிட்ட ஸ்டெண்ட் மாஸ்டர்…

‘வலிமை’ படத்தின் புதிய அப்டேட்டை படத்தில் பணிபுரியும் ஸ்டெண்ட் மாஸ்டர் வெளியிட்டுள்ளார்.

‘வலிமை’ படத்தின் அப்டேட்டை வெளியிட்ட ஸ்டெண்ட் மாஸ்டர்…

அஜீத்தின் நடிக்கும்‘வலிமை’ திரைப்படம் இந்தியா முழுமைக்குமான படமாக வெளிவர இருக்கிறது. இந்த படம் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்க, இந்த படத்தை இயக்கும் எச்.வினோத் இறுதிக்கட்ட ஷூட்டிங்கை முடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அஜீத்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். இப்படத்தில் வில்லனாக கார்த்திகேயா நடித்து வருகிறார். மேலும் சுமித்ரா, ராஜ் அய்யப்பா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘வலிமை’ படத்தின் அப்டேட்டை வெளியிட்ட ஸ்டெண்ட் மாஸ்டர்…

தொடர்ச்சியாக தென்னிந்திய திரைப்படங்களை தயாரித்து வரும் போனி கபூர் வலிமை படத்தையும் தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இப்படத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மே 1ம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து இறுதிக்கட்ட ஷூட்டிங்கை ஸ்பெயினில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

‘வலிமை’ படத்தின் அப்டேட்டை வெளியிட்ட ஸ்டெண்ட் மாஸ்டர்…

இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புசெழியன் பெற்றுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் ஸ்டெண்ட் மாஸ்டராக திலீப் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே ‘கைதி’ படத்தில் சண்டைக் காட்சிகளை சூப்பராக அமைத்திருந்தவர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் தற்போது ‘வலிமை’ படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதன்படி ‘வலிமை’ படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாகவும், அந்த காட்சிகள் கைதி படத்தைவிட 4 மடங்கு சூப்பராக வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் 90% முடிந்துவிட்டதாகவும், போஸ்ட் புரொடக்ஷன் வேகமாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this story