ரசிகர்களை ஏமாற்றிய தல அஜித்தின் வலிமை !

ரசிகர்களை ஏமாற்றிய தல அஜித்தின் வலிமை !

அஜித் – எச்.வினோத் கூட்டணி இரண்டாவதாக ‘வலிமை’ படத்திற்காக இணைந்துள்ளனர். இப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி எனும் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து அஜித் இரண்டாவது முறையாக எச்.வினோத் உடன் கூட்டணி அமைத்து ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். ‘வலிமை’ படம் ரேஸிங் கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களை ஏமாற்றிய தல அஜித்தின் வலிமை !

தற்போது ஹைதராபாத்தில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் இப்படம் ஜனவரி மாதத்திற்குள் நிறைவு பெற்று 2020 மே மாதம் 1ம் தேதி அஜித் பிறந்தநாள் அன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகியிருந்தது.

ரசிகர்களை ஏமாற்றிய தல அஜித்தின் வலிமை !

இந்நிலையில் படம் நிறைவு பெற்றாலும் படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளின் வேலைகள் அதிகமாக உள்ளதால் படம் அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி ரிலீஸ் ஆகாமல், தாமதமாகும் என படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் அஜித் பிறந்த நாளன்று விருந்து காத்திருக்கும் என எதிர்பார்த்து இருந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Share this story