‘வலிமை’ பட ஹீரோயினிடம் அப்டேட் கேட்ட பிரபல நடிகர்… வைரலாகும் பதிவு…

‘வலிமை’ பட ஹீரோயினிடம் அப்டேட் கேட்ட பிரபல நடிகர்… வைரலாகும் பதிவு…

வலிமை படத்தின் அப்டேட்டை நடிகை ஹுமா குரேஷியிடம் நடிகர் சித்தார்த் கேட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் அஜீத்தின் ‘வலிமை’ திரைப்படத்தை ரிலீஸ் செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. எச்.வினோத் இயக்கும் இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது. போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தில் ஹுமா குரேஷி ஹீரோயினாக நடிக்கிறார். வில்லனாக கார்த்திகேயா நடிக்கும் இப்படத்தில் சுமித்ரா, ராஜ் அய்யப்பா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

‘வலிமை’ பட ஹீரோயினிடம் அப்டேட் கேட்ட பிரபல நடிகர்… வைரலாகும் பதிவு…

நீரவ் ஷா இப்படத்தில் நிறைய சண்டை தத்ரூபமாக ஒளிபதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யுவன் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜீத் பிறந்தநாளில் வெளியாகும் என ஏற்கனவே அறிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இறுதிக்கட்ட ஷூட்டிங்கை ஸ்பெயினில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

‘வலிமை’ பட ஹீரோயினிடம் அப்டேட் கேட்ட பிரபல நடிகர்… வைரலாகும் பதிவு…

இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புசெழியன் பெற்றுள்ளார். வலிமை படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜீன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியிட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சித்தார்த் ‘வலிமை’ படம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். இதற்கு இந்த படத்தின் கதாநாயகி ஹூமா குரேஷி, ஒரு கமெண்ட்டை பதிவு செய்துள்ளார். அப்போது சித்தார்த்,‘மேடம் வலிமை அப்டேட்’ என்று கேட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்களும் மேடம் வலிமை அப்டேட் என்று கேட்டு லைக் செய்து வருகின்றனர்.

Share this story