வலிமை படத்தில் ஏற்பட்ட சிக்கல். சூடுபறக்கும் அப்டேட்…

வலிமை படத்தில் ஏற்பட்ட சிக்கல். சூடுபறக்கும் அப்டேட்…

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வலிமை படத்தில் ஏற்பட்ட சிக்கல். சூடுபறக்கும் அப்டேட்…

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் மீண்டும் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்கும் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாக ‘வலிமை’ திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருவதால் படம் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தனர்.

அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன.

வலிமை படத்தில் ஏற்பட்ட சிக்கல். சூடுபறக்கும் அப்டேட்…

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,இப்படத்தில் இடம்பெறும் முக்கியமான பைக் ரேஸ் காட்சியை சுவிட்சர்லாந்தில் படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அங்கு படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அந்தக் காட்சிகளை டெல்லியில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வலிமை படத்தை அஜித்தின் பிறந்தநாளையொட்டி ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

Share this story