சமுத்திரக்கனிக்கு ஜோடியான வனிதா விஜயகுமார்!

சமுத்திரக்கனிக்கு ஜோடியான வனிதா விஜயகுமார்!

நடிகை வனிதா விஜயகுமார், அந்தகன் படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பிரஷாந்த் தற்போது அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் ஆன அந்தகன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார்.

அந்தாதுன் படத்தில் தபு நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் சிம்ரன் நடிக்கிறார். 19 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்ரன் பிரஷாந்த் உடன் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் நடிகை ப்ரியா ஆனந்த் நடிக்கிறார்.

சமுத்திரக்கனிக்கு ஜோடியான வனிதா விஜயகுமார்!

சில தினங்களுக்கு முன்பு சமுத்திரக்கனி இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் நடிகை வனிதா விஜயகுமாரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று பட அறிவிப்பின் போதே தெரிவிக்கப்பட்டது.

சமுத்திரக்கனிக்கு ஜோடியான வனிதா விஜயகுமார்!

தற்போது வனிதா விஜயகுமார் இந்தப் படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிப்பதில் மிக்க மகிழ்ச்சி என்று வனிதாவே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Share this story